This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 30 September 2014

பெட்ரோல் விலை லிட்டருக்கு 68 காசுகள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.1 குறைகிறது


புதுடெல்லி,
பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 68 காசுகள் குறைந்தது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலையும் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால் டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தாமல் இறக்குமதி விலைக்கு சமமாக வரும்வரை மாதம் லிட்டருக்கு 50 காசுகள் மட்டும் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது.
15 நாட்களுக்கு ஒரு முறை, 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் இதுபோல விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
வித்தியாசம் நீங்கியது இதன் காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 31–ந் தேதி டீசல் விலையை 50 காசுகள் உயர்த்தியவுடன், சர்வதேச சந்தை விலைக்கும், இங்குள்ள சில்லரை விலைக்கும் இடையே இருந்த வித்தியாசம் நீங்கியது. செப்டம்பர் 16–ந் தேதி சர்வதேச விலையைவிட இந்தியாவில் டீசல் லிட்டருக்கு 35 காசுகள் அதிகமாக இருந்தது. இந்த கூடுதல் விலை இப்போது ஒரு ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
நேற்று மாலை நடைபெற்ற பெட்ரோல், டீசல் விலை நிர்ணய கூட்டத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. சர்வதேச சந்தை விலைக்கே பெட்ரோல், டீசலை விற்கும் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் கைமாறுவதை தடுக்க இந்த விலை குறைப்பை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு பின்னர் எனவே இதுகுறித்து எண்ணெய் அமைச்சகம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருப்பதால் தேர்தல் கமிஷனுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்து அதன் கருத்தும் கேட்கப்பட்டது.
இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இறுதியாக 2009–ம் ஆண்டு ஜனவரி 29–ந் தேதி டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.30.86 என்ற விலைக்கு விற்கப்பட்டது. அதன்பின்னர் சர்வதேச விலைக்கு ஏற்பவும், 2013–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மாதம் 50 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டும் வந்தது.
பெட்ரோல் 68 காசுகள் குறைந்தது பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 68 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.70.87 ஆனது. டெல்லியில் 65 காசுகளும், மும்பை மற்றும் கொல்கத்தாவில் 68 காசுகளும் குறைந்தது.
டீசல் விலையும் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) மாலை இந்தியா திரும்புகிறார். பிரதமர் மோடி இந்தியா வந்தபின்னர் டீசல் விலை குறைப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2013 ஜனவரியில் இருந்து இதுவரை 19 தவணைகளில் டீசல் விலை (வரிகள் உள்பட) ஒட்டுமொத்தமாக ரூ.11.81 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.ஏ.டி.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசித்தேதி அக்டோபர் 14 வரை நீட்டிப்பு

wwww.tnppgta.com

புதுடில்லி: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் சில உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்புகளான எம்.இ., எம்.எடக் மற்றும் நேரடி பி.எச்டி., படிப்புகளில் சேர, கேட்(GATE) எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும், மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் உயர்கல்விக்கான நிதி உதவி பெறவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்பின் போதும், கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்தாண்டு, இந்த கேட் நுழைவுத்தேர்வை, ஐ.ஐ.டி., கான்பூர் நடத்துகிறது.
இதற்கு விண்ணப்பிக்க இன்று (30ம் தேதி) இறுதி நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக அந்த மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கோரிக்கைகள் சென்றன. தொடர்ந்து, கேட் தேர்வுக் குழுவிற்கு அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து விவாதித்த கேட் தேர்வுக் குழு, இரண்டு வாரத்திற்கு விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடிவெடுத்தது. இதன்படி, அக்., 14ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மழைக்கால நோய்கள்: சமாளிப்பது எப்படி?

மழைக்காலம் தொடங்கிவிட்டால் போதும் ஜலதோஷம், சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி என நோய்களின் பாதிப்புகள் வரிசையில் வந்து நிற்கும். தமிழகத்தில் நகரம், கிராமம் எனப் பாகுபாடு இல்லாமல், தெரு சுத்தமும்,
பாதை சீரமைப்பும், சாலைப் பராமரிப்பும் சரியில்லாத காரணத்தால், மழைத் தண்ணீர் வடிய வழியின்றித் தெருவெல்லாம் குளமாகிவிடுகிறது.
இதனால் சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீரும் தெருநீரும் கலந்து நோய்க்கிருமிகள் வாழ வழியேற்படும். விளைவு வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள்காமாலை என்று பல தொற்றுநோய்கள் நம்மைப் பாதிக்கத் தொடங்கிவிடும்.
பருவநிலை மாறும்போது, அதுவரை உறக்க நிலையில் இருந்த பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் விழித்தெழுந்து, வீரியம் பெற்று மக்களைத் தாக்கத் தயாராகின்றன. மழையில் நனைகிறபோது இந்தக் கிருமிகள் நமக்குப் பரவப் பொருத்தமான சூழல் உருவாகிறது.
அப்போது நம்மிடையே ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் மழைக்காலத்தில் நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
வைரஸ் காய்ச்சல்
மழைக்காலத்தில் பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது, ஃபுளூ காய்ச்சல். இது ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. நோயாளி தும்மும்போதும் இருமும்போதும் மூக்கைச் சிந்தும்போதும் இந்தக் கிருமி சளியோடு வெளியேறி, அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை கால்வலி. தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள்.
இந்தக் காய்ச்சலுக்குச் சிறப்புச் சிகிச்சை எதுவும் கிடையாது. காய்ச்சலைக் குறைக்க ‘பாராசிட்டமால்' மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதல் அவஸ்தைகளைக் கட்டுப்படுத்த ‘ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள்' பலன் தரும். ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும்.
குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால், வலிப்பு வந்துவிடலாம். எனவே, உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும்.
திரவ உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டும். சுத்தமான குடிநீரைத் தரவேண்டியது அவசியம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், சாதாரணத் தண்ணீரில் துண்டை நனைத்துப் பிழிந்து குழந்தையின் உடல் முழுவதும் விரிக்க வேண்டும்.
நிமோனியா காய்ச்சல்
பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமிகள் நுரையீரலைப் பாதிப்பதால் வரக்கூடியது, நிமோனியா காய்ச்சல். கடுமையான காய்ச்சல், தலைவலி, தசைவலியில் தொடங்கி, இருமல், சளி, சளியில் ரத்தம், நெஞ்சுவலி, மூச்சு வாங்குதல் எனத் தொல்லைகள் அதிகரிக்கும். ஆரம்ப நிலையில் தகுந்த ஆன்ட்டிபயாடிக்குகள் மூலம் இதற்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், நோய் முழுமையாகக் குணமாகிவிடும்.
இல்லையென்றால் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகளைப் பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இது பெரும்பாலும் குழந்தைகளையும் முதியவர்களையும்தான் அதிகமாகப் பாதிக்கும். இதைத் தடுப்பதற்கும் தடுப்பூசி உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் போட்டுக்கொள்ளலாம்.
வயிற்றுப்போக்கு, காலரா
மாசடைந்த குடிநீர், அசுத்த உணவு மூலம் ரோட்டா வைரஸ்கள் நமக்குப் பரவுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதேபோல் பாக்டீரியாக்கள் மூலம் காலரா ஏற்படுகிறது. ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளைப் பரப்புகின்றன.
நோயாளியின் உடல் இழந்த நீரிழப்பைச் சரி செய்வதே இதற்குத் தரப்படும் சிகிச்சையின் நோக்கம். எனவே, பாதிக்கப்பட்டவருக்குச் சுத்தமான குடிநீரை அடிக்கடி கொடுக்க வேண்டும். உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீர் அல்லது ‘எலெக்ட்ரால்' பவுடர் தரலாம்.
சீதபேதி
அமீபா, சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் நம்மைப் பாதிக்கும்போது சீதபேதி வரும். தெருக்களில், திறந்தவெளிகளில், குளத்தின் ஓரங்களில் மலம் கழிக்கும்போது மலத்தில் இருக்கின்ற கிருமிகளின் முட்டைகள், மழைக்காலத்தில் சாக்கடைநீர், குடிநீரில் கலந்து தொற்றிவிடும்போது, சீதபேதி ஏற்படும். காய்ச்சல், அடிவயிற்று வலி, வாந்தி, மலத்தில் சீதமும் ரத்தமும் கலந்து போவது போன்றவை இதன் அறிகுறிகள். இதற்கு மருத்துவரின் ஆலோ சனைப்படி சிகிச்சை தேவை.
மஞ்சள் காமாலை
குடிநீர், உணவு மாசு மூலம் ‘ஹெபடைட்டிஸ்-ஏ' வைரஸ்கள் தாக்கும்போது மஞ்சள் காமாலை வரும். பசியின்மை, காய்ச்சல், குளிர் நடுக்கம், வயிற்றுவலி, வாந்தி, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது, கண் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.
சுத்தமான குடிநீரைப் பருகுவது, மாவுச் சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக உண்பது, எண்ணெய் - கொழுப்பு உணவு வகைகளைத் தவிர்ப்பது ஆகியவை இந்த நோயைக் குணப்படுத்தும்.
இந்த நோய்க்கும் தடுப்பூசி உள்ளது. குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு முறை, அடுத்து ஓராண்டு கழித்து ஒரு முறை என இரண்டு தவணைகள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
டைபாய்டு காய்ச்சல்
‘சால்மோனெல்லா டைபை' ( Salmonella typhi ) எனும் பாக்டீரியாவால் இது வருகிறது. இந்தக் கிருமிகளும் அசுத்தமான குடிநீர், உணவு மூலம்தான் பரவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும்.
பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை தொல்லை தரும், உடல் சோர்வடையும். இதைக் குணப்படுத்தப் பல நவீன மருந்துகள் உள்ளன.
இதைக் கவனிக்கத் தவறினால் குடலில் ரத்தக்கசிவு, குடலில் துளை விழுதல், பித்தப்பை அழற்சி போன்ற கடுமையான விளைவுகள் உண்டாகும். உணவுச் சுத்தம், குடிநீர்ச் சுத்தம் இந்தக் காய்ச்சலைத் தடுக்க உதவும். இந்த நோய்க்கும் தடுப்பூசி உள்ளது. ஒருமுறை இதைப் போட்டுக்கொண்டால் மூன்று வருடங் களுக்கு டைபாய்டு காய்ச்சல் வராது.
எலி காய்ச்சல்
மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி போன்றவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா' எனும் கிருமிகள் இருந்தால் எலி காய்ச்சல் (Leptospirosis) வரும்.
கடுமையான தலைவலி, காய்ச்சல், தொட்டாலே தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். இந்த நோய்க்கும் பல நவீன மருந்துகள் உள்ளன.
மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி போன்றவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா' எனும் கிருமிகள் இருந்தால் எலி காய்ச்சல் (Leptospirosis) வரும்.
கடுமையான தலைவலி, காய்ச்சல், தொட்டாலே தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். இந்த நோய்க்கும் பல நவீன மருந்துகள் உள்ளன.
கொசு நோய்கள்
மழைக்காலத்தில் தெருவில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்களின் ஆதிக்கம் பெருகுகிறது. அப்போது மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்றவை ஏற்படுகின்றன. விட்டுவிட்டுக் குளிர்காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்கலாம்.
மூட்டுவலி அதிகமாக இருந்தால் சிக்குன் குனியா. மூட்டு வலியுடன் உடலில் ரத்தக்கசிவும் காணப்பட்டால், அது டெங்கு. கொசுக்களை ஒழித்தால்தான் இந்த நோய்களைத் தடுக்க முடியும். அதுவரை வீட்டு ஜன்னல், படுக்கையைச் சுற்றிக் கொசுவலையைக் கட்டி சமாளிக்க வேண்டியதுதான்.

பள்ளி விபரங்களை அக்.,8க்குள் சமர்ப்பிக்க தலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு

விருதுநகர் : ""பள்ளி சார்ந்த அனைத்து விபரங்களையும் அக்.,8க்குள் படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்,'' என, தலைமையாசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அனைத்து நிர்வாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கூட்டத்தில் அவர்களின் பள்ளி சார்ந்த அனைத்து விபரங்கள் சார்பாக அதற்கான க்ஈஐகுஉ படிவத்தில் பூர்த்திசெய்து அக்.,8க்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. காலாண்டுத்தேர்வு முடிவுகளை தீதீதீ.ஞிடடிஞுஞூஞுஞீதஞிச்tடிணிணச்டூணிஞூஞூடிஞிஞுணூ.டிண என்ற இணையதளத்தில் அக்.,11 மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு குறித்தும், நீர்நிலைகள், உயர்மின்அழுத்த கம்பிகள் மற்றும் வெடிவிபத்துக்கள் போன்றவைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் வலியுறுத்தப்பட்டது. 6,7,8ம்வகுப்பு மாணவர்களின் அடிப்படைத்திறன் மற்றும் வாசிப்புத்திறனை அதிகரிக்க போதியபயிற்சியளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இம்மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்றும், இன்றும்(அக்.,1) விருதுநகர் சுப்பையா நாடார் பள்ளியில் புத்தாக்க பயிற்சியளிக்கப்படுகிறது. அதில் பள்ளி நடைமுறைகள், தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து விளக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது தொழிற்பயிற்சி பல்கலை தொடக்கம்!!

இந்தியாவின்முதலாவது தொழிற்பயிற்சி பல்கலைக் கழகம் புனேயில்
தொடங்கப்பட்டுள்ளது. தொழில் திறன் மிக்க இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் குஜராத் மாநில அரசும்மனித வள நிறுவனமான டீம்லீஸ் நிறுவனமும் இணைந்து இந்த பல்கலைக்கழகத்தை
உருவாக்கியுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில்4 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். டீம்லீஸ்ஸ்கில்ஸ் பல்கலைக் கழகம் (டிஎல்எஸ்யு) முதல்கட்டமாக மூன்று பிரிவுகளில் சிறப்புபயிற்சிகளை அளிக்கிறது. மெகடிரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஹார்ட்வேர், நிதி மற்றும் வர்த்தக செயல்பாடுகுறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வரும் காலங்களில் சில்லறைவர்த்தகம் மற்றும் ஹோட்டல் நிர்வாகம்குறித்த பயிற்சிகளையும் அளிக்க உள்ளது. இந்தபல்கலைக் கழகத்தில் இப்போது 20 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக தொழில்பயிற்சி பல்கலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் செயல்பாடு மற்றும் இதுகுறித்து வெளியாகும்விமர்சனங்களின் அடிப்படையில் இதை படிப்படியாக விரிவுபடுத்தத்திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சிஅளிக்க முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக இணை நிர்வாகி ரிதுபர்னாசக்ரவர்த்தி தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில்இந்நிறுவனம் ரூ. 50 கோடியை முதலீடுசெய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். டிஎல்எஸ்யுபல்கலை கார்ப்பரேட் கல்வி, கிளவுட் அடிப்படையிலானபயிற்சி, என்இடிஏபி (பயிற்றுநர் பயிற்சித் திட்டம்) மற்றும் வளாக பயிற்சிஉள்ளிட்டவற்றை அளிக்கிறது. அமெரிக்காவில் செயல் படும் சமுதாயக்கல்லூரி அடிப்படையில் இது உருவாக் கப்பட்டுள்ளது. இளங்கலைப் பட்டம் பெறும் வகையில்6 பருவத் தேர்வுகளைக் (செமஸ்டர்) கொண்டது. நான்கு செமஸ்டர்களைப் பூர்த்திசெய்த மாணவருக்கு அசோசியேட் பட்டம் வழங்கப்படும். முதலாண்டுமுடிக்கும் மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கப்படும்
. தொழில்கல்விபயில சேரும் மாணவர்கள் அதிகமதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்ப தில்லை. மாணவர்களுக்குஅவர் களது வசதிக்கேற்ப படிப்புமற்றும் தொழிற்கல்வியைக் கற்றுத் தருவதே பிரதானநோக்கம் என்று சக்ரவர்த்தி கூறினார். இதனால் முதலாண்டு முடித்த மாணவர்களுக்கு பயிற்சிமுடிப்பு சான்றிதழ் அளிக்கப்படும். அவர் அதைக் கொண்டுவேலையில் சேர முடியும். மீண்டும்தனது படிப்பைத் தொடர விரும்பினால் அவர்முதலாண்டில் சேர வேண்டியதில்லை. அவர்இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடரலாம். இதேபோல விடுபட்ட ஆண்டிலிருந்து படிப்பைத் தொடரலாம். தாற்காலிக பணி வழங்குவதில் டீம்லீஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் மூலம்ஒரு லட்சம் பேர் பல்வேறுநிறுவனங்களில் பணி புரிகின்றனர். திறமையானபணியாளர்களுக்கான தட்டுப்பாட்டை போக்குவதற்காக இந்த தொழிற்பயிற்சி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்தான் பள்ளிக் கல்வியை பாதியில்விடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 12-வதுபடிப்பை எட்டுவதற்குள் 10 மாணவர்களில் 6 பேர் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இந்தியாவில் உயர் பதவிகள், அதிகாரிகள்உள்ளிட்ட பணிகளை மட்டுமே உள்ளடக்கியதாககல்வி முறை உள்ளது. ஆனால்இதன் மூலம் வேலை வாய்ப்புபெறுவோர் 8 சதவீதம் மட்டுமே. 92 சதவீதம்பேருக்கு பிற தொழில்களின் மூலம்தான்வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்த தொழில் கல்வியைப்பயில ஒரு செமஸ்டருக்கு ரூ. 22 ஆயிரம் கட்டணமாகும். இத்தொகையை மாணவர்கள் செலுத்துவதற்கு வசதியாக சில நிதிநிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகரிது பர்னா தெரிவித்தார். இந்தபல்கலையில் பயிற்சி பெறும் மாணவர்களுக்குபிளஸ் 2-வுக்கு இணையான கல்வித்தகுதி மற்றும் தொழில் பயிற்சிதகுதியை இந்த பல்கலைக் கழகம்அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

PG TRB Exam விரைவில்...


தமிழகத்தில்அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியைசேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம்உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்குதேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம்விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்தமூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சிஉயர்நிலை பள்ளிகள் 300,
மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
           கடந்த ஜூலையில் நடந்தசட்டசபை கூட்டத்தில் 100 உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் எனஜெ., அறிவித்தார். அதன் அடிப்படையில் தரம்உயர்த்தப்பட்ட 100 பள்ளிகள் பட்டியலை பள்ளி கல்வி துறைசெயலர் சபிதா வெளியிட்டுள்ளார். இந்தபள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள், ஒன்பதுமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 900 பேர் நியமிக்கப்படஉள்ளனர். இவர்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., மூலம் விரைவில்நடக்க உள்ளது.
            கல்வி துறை அதிகாரிகள்ஒருவர் கூறுகையில், “அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இதில்ஒவ்வொரு பள்ளிக்கும் புதிதாக தலா ஒன்பதுமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர்என 1000 காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கானபுதிய ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்,” என்றார்.

Monday, 29 September 2014

TET புதிதாக நியமிக்கப்பட்ட 10,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று நடக்கிறது

  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 20,500 பேர் கடந்த வியாழக்கிழமை பணியில் நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்திற்கு எதிரான இடைக்கால தடை விலக்கப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் நியமனத்தை பள்ளி கல்வித்துறை முடித்தது. 
        அந்தந்த மாவட்ட கல்வி முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் ஆன்லைன் மூலமாக காலி இடங்களில் பணி அமர்த்தப்பட்டனர். நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் மறுநாளே பணியில் சேர்ந்தனர். பணியில் சேர்ந்த மறுநாள் முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர் 6–ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. புதியதாக நியமிக்கப்பட்ட 10,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று  (30–ந்தேதி) மற்றும் 1–ந்தேதி ஆகிய 2 நாட்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. புதிய ஆசிரியர்கள், மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும், 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கிரேடு முறைப்பற்றியும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்றுதல் வேண்டும் என்று இதில் அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல புதிதாக நியமிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ்–2 மாணவர்களுக்கு எளிதில் புரியக்கூடிய வகையில் பாடம் நடத்தவும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் இந்த பயிற்சியின்போது எடுத்துரைக்கப்படும். இதுபற்றிய சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ளார்.

படித்து பட்டம் பெற்றாலும் திறமையும், தகுதியும் தேவை!

   வேலைவாய்ப்புதேடி காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை, தமிழகம் மட்டும் அல்ல; நாடு முழுவதும் அதிகரித்திருக்கிறது. தாங்கள் படித்த கல்விக்குஏற்ப, வருமான அளவை எதிர்பார்த்துகாத்திருக்கும் இவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு, ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.


         குறிப்பாக, பொறியியல் படிப்பு படித்த லட்சக்கணக்கானஇளைஞர்கள், வேலைவாய்ப்பு சந்தை யில் குவிந்துள்ளனர். வேலை கிடைத்தாலோ அதிக சம்பளம், எதிர்காலம்வளமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முற்றிலும்மாறி விடுகிறது.
 
            பொறியியல்படிப்பில், அதிக மதிப்பெண்கள், திறனறிபோட்டிகளில் தேர்வு பெறும் தன்மை, நேர்முக தேர்வுகளில் சமாளிக்கும் திறன் ஆகிய அனைத்தும், தேவைப்படும் நிலை இப்போது வந்துவிட்டது. இதனால் சிலர், வங்கிப்பணிகள் அல்லது அரசுப் பணிதேர்வுகளையும் எழுதத் துவங்கி விட்டனர். நாட்டின் கவுரவமான எரிசக்தி துறை நிறுவனத் தலைமைநிர்வாகி ஒருவர், தன் நிறுவனம்எதிர்பார்க்கும் விஷயங்களை, வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
 
                    'பொறியியல்பட்டதாரியின் மதிப்பெண்கள், கணினியில் அதிக தேர்ச்சி, பணியில்சேர்ந்தால் திறனுடன் உடனடியாக முடிவெடுக்கும் சுபாவம், சக ஊழியர்களுடன் தகவல்பரிமாற்ற திறன், குழு உணர்வு, அரைகுறையாக காலந்தள்ள விரும்பாமை போன்ற அம்சங்கள் இருக்கிறதாஎன்று, அலசப்பட்டு பணி தரப்படுகிறது' என்கிறார்.
 
           இது மட்டும் அல்ல; பணியில்ஒருவர் சேர்ந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில், அவரால், அந்த நிறுவனத்திற்கு என்ன பயன், சந்தைப்போட்டிகளில் சமாளிக்கும் திறன் கொண்டவரா என்றஆலோசனைகளை மேற்கொள்ளும் வகையில், இப்போது பெரிய கம்பெனிகளில்ஆட்களை தேர்வு செய்கின்றனர்.தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், ஓராண்டு சம்பளம், 3 லட்சம்ரூபாய் தந்தால் போதும், அதிகதிறமை கொண்டவர்களுக்கு, அதிக சம்பளம் தரலாம்என்ற உத்தியை பின்பற்றுகின்றன. ஒருபொறியியல் பட்டதாரி, ஆண்டு வருமானம், 20 லட்சம்சம்பளம் பெறுவதற்குள், அவர் அதிக பிரயாசைபெற நேரிடும். அரைகுறையாக இருந்து காலம் தள்ளுவது, தனிப்பட்டவரின் அபார அதிர்ஷ்டத்தை பொறுத்தது.இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, 'நாஸ்காம்' நிறுவனம், சமீபத்தில், பொறியியல் பட்டதாரிகள் குறித்து நடத்திய ஆய்வில், சிலதகவல்கள் கிடைத்தன. அதன்படி, இந்தியாவில் உள்ள வேலை தேடும்பொறியியல் பட்டதாரிகளில், 27 சதவீதம் பேர் மட்டுமே, முழுத்திறன் பெற்றவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.ஆனால், இந்தியாவின்மொத்த வளர்ச்சி அதிகரித்து, 7 சதவீதத்தை எட்டி, அதிலும் உயர்ந்துநின்றால், அடுத்த ஆறு ஆண்டுகள்கழித்து, பல்துறைகளுக்கும், 25 லட்சம் பொறியியல் பட்டதாரிகள்தேவைப்படலாம் என, பொருளாதார ஆய்வுகள்தெரிவிக்கின்றன.தற்கேற்றகல்வி, திறனறி தகுதிகள் மற்றதேவைகளை வளர்த்துக் கொண்டால் தான், இளைஞர்களுக்கு, பொருளாதாரஅடிப்படையில் சற்று நிம்மதியான வாழ்க்கைஅமையும்.
 
         சில பெரிய நிறுவனங்களும், மத்தியஅரசும், திறனறி பயிற்சிகளுக்கு சிலஏற்பாடுகளை  இப்போதுதுவங்கியிருப்பது நல்ல விஷயம்.வங்கிவேலைகளில், இனி பணிபுரிய விரும்புவோர், அத்துறை அடையும் நவீனமயத்திற்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதுடன், வங்கிச் சேவைகளையும் கையாளப்பழகுவதின் மூலமே, அதில் நீடிக்கமுடியும்.கல்வி பயின்று, பட்டம்பெற்றதும், அரசாங்க வேலை, அல்லதுவேறு பணிகள் என்ற காலம்இனி இருக்காது. ஏனெனில், உலகப் பொருளாதாரத்திற்கு ஈடாகவளரும்போது, இதை எதிர்கொள்வதைத் தவிரவழி இல்லை.

பள்ளி மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த களமிறங்கிய அமைச்சர்!

  மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசுமை சூழலை உருவாக்கும் முயற்சியில் மனிதவள அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

       இதுகுறித்து கூறப்படுவதாவது: மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
 
         இத்திட்டத்தின் வெற்றிக்கு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஆகிய அனைவரின் பங்களிப்பும் கோரப்பட்டது.

தங்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் மனநிலையை, மாணவர்களிடம், இத்திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் மூலம், அதிகமான பசுமை சூழலைக் கொண்டிருக்கும் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

பள்ளிகள், green ranking meter மூலம் மதிப்பிடப்படும் மற்றும் இதனால், அவை தங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வைப் பெறும்.

அக்டோபர் 31ம் தேதி வரை தொடர்ச்சியாக செயல்பாட்டில் இருக்கும் இத்திட்ட நடைமுறையின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையே, திருப்தியான வாழ்வுக்கு இட்டுச் செல்லும் என்ற உண்மை, மாணவர்களுக்கு உணர வைக்கப்படும். மேலும், இத்திட்டத்தின் மூலம், கழிப்பறை வசதியில்லாத பள்ளிகள் என்ற அவலத்தை நீக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம்

 அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


        தமிழகத்தில் 2014-2015ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9ம் வகுப்பு வரை 2ம்பருவத்திற்கான இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், இலவச சீருடைகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் கல்வி மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு இன்று முதல் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

           அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான இலவச பாட புத்தகங்களை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக். 6ம் தேதி அன்று மாணவர்கள் வசம் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் இலவச சீருடை வழங்கப்பட வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களும் இப்பணியில் காலதாமதமின்றி விரைவு நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்பதை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் முதுநிலை பட்டப் படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வி பெறுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், இளநிலை பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெறும் மாணவர்களுக்கு, முதுநிலை பட்டப் படிப்புக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்குகிறது. மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க செப்டம்பர் 15 கடைசி நாள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாகப் பிறந்து, முதுநிலை பட்டப் படிப்பு மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஏன் தோற்கிறது


கல்வியைச் சந்தைப் பொருளாக்குவதில் அமெரிக்காவின் தோல்வி மற்ற நாடுகளுக்கு ஒரு பாடம்!
பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பு தகர்ந்துவிட்டது, இதற்கான மாற்றை இந்தத் தொழிலே தகவமைத்துக்கொண்டுவிடும் என்று இன்றைய கல்வித் துறை சீர்திருத்தவாதிகள் நினைக்கின்றனர். போட்டி ஏற்பட்டால் இந்தத் துறை சீரடைந்துவிடும் என்று சிலர் கருதுகின்றனர்.

வேறு சிலரோ, இணையத்தின் மூலம் சீரமைத்துவிடலாம் என்று எதிர்மறையாகச் சிந்திக்கின்றனர். இரு தரப்பாருமே கல்வித் துறையின் பிரச்சினையை ‘சந்தை' தீர்த்துவிடும் என்றோ, 'தொழில்நுட்பம்' சரிசெய்துவிடும் என்றோதான் நினைக்கின்றனர். இது மனித ஆற்றல் சம்பந்தப்பட்டது இதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியம் என்றே கருதவில்லை.
இரண்டு உத்திகளுமே அவற்றை முன்மொழிந்த வர்கள் கொடுத்த பீடிகை அளவுக்கு வெற்றிபெறவில்லை. அதற்கு நல்ல காரணங்களும் உண்டு. ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான உறவுகளைச் சீர்குலைத்துவிட்டு, கல்வித் தரத்தை மேம்படுத்த முடியாது. தங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; அடையக்கூடிய நல்ல லட்சியம் இருக்கிறது; பள்ளிக்கூடத்தில் படிப்பதன் மூலம் வாழ்வில் சாதனை படைத்துவிட முடியும் என்ற எண்ணத்தை மாணவர் கள் மனதில் விதைக்க வேண்டும். இதை வலுவாக மேற்கொள்ளும்போதுதான் ஆசிரியருக்கும் மாணவ ருக்கும் இடையில் ஒரு பிணைப்பு ஏற்பட முடியும்.
சந்தைகளுக்கேற்ற வாசகங்கள்
கல்வித் துறையின் கொள்கை வகுத்தலில், சந்தை களுக்கேற்ற வாசகங்கள்குறித்தே அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. உயர் தரத்திலான வாசிப்புத் திறனும், கணிதப் புலமையும்தான் வெற்றிக்கான அளவு கோலாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர் களுக்குக் கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு ஊதா நிற அட்டைகள் (தண்டனையாக) தரப்படுகின்றன. நன்றாக மதிப்பெண் வாங்கிய மாணவர்களின் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, சிறப்பூதியம் போன்ற சலுகைகள் தரப்படுகின்றன.
வர்த்தக நிறுவனங்கள் எப்படி லாபம் தராத கடைகளை மூடி, எங்கே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமோ அங்கே கடை திறப்பதைப் போல, குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் மூடப்படுகின்றன. புதிய ஆசிரியர்கள், புதிய நிர்வாகிகளுடன் வேறு இடத்தில் நவநாகரிக மோஸ்தர்களுடன் ‘மாதிரி'ப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இணையத்தால் என்ன செய்துவிட முடியும்?
இணையம் மூலம் படிக்க உதவும் ‘கே-12' போன்ற பள்ளிக்கூடங்கள் அமெரிக்காவின் பல மாநிலங்களில் இப்போது பெருகிவிட்டன. இவையெல்லாம் பள்ளிக் கூடங்கள் என்று அழைப்பதற்கே அருகதையற்றவை. தங்களுடைய குழந்தைகள் எங்கே படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றோர்களுக்குத் தரப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு எந்தப் பலனும் ஏற்பட்டுவிடவில்லை. மில்வாகியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் இந்தச் சோதனையை முதலில் நடத்தியது. ஆனால், கல்வித் தரத்தில் அது சற்றும் முன்னேறவில்லை.
கல்வியின் அடித்தளம்
கல்வித் துறை சீர்திருத்தவாதிகள் சந்தைகள், போட்டிகள்குறித்து மட்டும்தான் பேசுகின்றனர்; நல்ல கல்விக்கான அடித்தளமான திறமை மிகுந்த ஆசிரியர்கள், பாடம் கற்பதில் ஆர்வம் மிகுந்த மாணவர்கள், சவாலான பாடத்திட்டம்குறித்துப் பேசுவதே இல்லை. காலம்காலமாக இந்தத் துறைகளில் ஏற்படும் சவால்களையெல்லாம் எதிர்கொண்டு இன்னமும் முனை மழுங்காமல் இருக்கும் உத்திகள்தான் கல்வித் தரத்தைத் தொடர்ந்து பராமரித்துக்கொண்டு வருகின்றன.
“எந்த விதமான உற்பத்தியாக இருந்தாலும், சேவையாக இருந்தாலும் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருங்கள்” என்று மேலாண்மை நிர் வாகத்தில் நிபுணரான டபிள்யு. எட்வர்ட்ஸ் டெமிங் 50 ஆண்டுகளாக இடைவிடாமல் சொல்லிவந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பானிய நிறுவனங்கள், ‘திட்டமிடு, செய், சரிபார், செயல்படு’ என்ற கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன.
ஆசிரியர்-மாணவர் பிணைப்பு
நிறுவனங்கள் தங்களுடைய நிர்வாகத் திறனாலும், சரியான அமைப்பு முறையைக் கையாள்வதாலும், புதிய கருத்துகளையும் தொழில்நுட்பங்களையும் நிறு வனத்துக்குள்ளேயே கற்றுக்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதாலும்தான் முன்னேறுகின்றன என்று ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் வரலாற்றாசிரியரும் புலிட்சர் விருது பெற்றவருமான ஆல்பிரட் டி. சாண்ட்லர் பல உதாரணங்களுடன் விளக்கிக் காட்டியிருக்கிறார்.
இது போன்ற கலாச்சாரத்தை உருவாக்க நீண்ட நாட்கள் பிடிக்கும், ஆடம்பரமான எண்ணம் கொண்ட நிர்வாகிகள் இந்த முயற்சிகளைச் சீர்குலைத்துவிடுவார்கள். வெற்றிகரமான அனைத்துக் கல்வி முயற்சிகளும் வலுவான ஆசிரியர்-மாணவர் பிணைப்புமூலம்தான் உருவாகியுள்ளன. அந்தப் பிணைப்புக்கு ஆதரவாக நிர்வாக அமைப்புகளும் உதவியுள்ளன. பள்ளிப் படிப்புக்கு முந்தைய வகுப்புகளில் மாணவர் களைத் தயார்செய்யும் நிறுவனங்கள் அவர்களிடம் கல்வி வேட்கையை விதைக்கின்றன.
அக்கறையுள்ள ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்களைவிட மூத்தவர்கள் பலருடன் சேரும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இப்போது கல்வித் துறையில் புதிதாக முளைத்துள்ள வியாபாரப் போட்டியின் காரணமாகப் பட்டயம் படிக்கும் ஆர்வத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய படிப்பைப் பாதியில் கைவிடுகின்றனர். இணையம் மூலம் படிக்கின்றனர். கற்றலில் ஆழ்ந்த பிரச்சினை உள்ளவர்களைத் தொழில் முறைக் கல்வியாளர்கள் கையாள்கின்றனர்.
வெற்றியும் தோல்வியும்
பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நிறுவப்பட்ட அமைப்பு, புதிய கல்வி முறையில் 100 ஆரம்பப் பள்ளிகள் நன்றாக மேம்பட்டிருப்பதாகவும், 100 மேம்படவில்லை என்றும் கூறுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் இடையே நல்ல நம்பிக்கை நிலவிய இடங்களில் பள்ளிகள் நல்ல தரத்தை எட்டின. அப்படி இல்லாத 100 பள்ளிகள் தோல்வியடைந்தன.
நாடு முழுக்கக் கல்வியைக் கண்காணிக்கும் ‘பிக் பிரதர்ஸ் பிக் சிஸ்டர்ஸ் ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பு லட்சக் கணக்கான வளரிளம் மாணவர்கள் மீது செல்வாக்கு செலுத்தியுள்ளது. அந்த அமைப்பு ஏற்பாடு செய்த, மலையேறும் நிகழ்ச்சியாக இருந் தாலும், அருங்காட்சியகம் அமைப்பதாக இருந்தாலும் மாணவர்களும் பெரியவர்களும் இணைந்தே செய்தனர். இதனால், அவர்களிடையே பரஸ்பர மரியாதையும் அன்பும் அதிகரித்தது.
‘நியூயார்க் சிடி யுனிவர்சிடி’ மாணவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, படிப்பைப் பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கை குறைந்து, பட்டம் பெறுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது. இந்தத் திட்டங்களும் நடவடிக்கைகளும் ஆசிரியர்கள், மாணவர்கள் பிணைப்பு அவசியம் என்பதை உணர்த்தியபோதிலும், கற்றல்-கற்பித்தலுக்கான தொழில்நுட்பத்துக்காகக் கோடிக் கணக்கான டாலர்களை பப்ளிக் பள்ளிகள் செலவழித்து வருகின்றன. தொழில்நுட்பம்தான் முக்கியம் மற்ற அம்சங்கள் அல்ல என்று அவை வாதிடுகின்றன. தொழில்நுட்ப ஆதரவாளர்கள் என்னதான் கூறி னாலும், அவற்றால் விளைந்த பலன்கள் ஏமாற்றத் தைத்தான் தருகின்றன என்கிறார் டாம் வாண்டர் ஆர்க். இவர் பில்–மெலிண்டா கேட்ஸ் நிறுவனங்களின் கல்வித் தொழில்நுட்பத்தை வழங்கும் அதிகாரியாகவும் பணியாற்றியிருக்கிறார்.
திறமையுள்ள ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தைக் கையாண்டால், அது கல்வித்தரத்தை நன்றாக வளர்த்து விடும். சொல்லித்தருவதும் கற்றுக்கொள்வதும் மனம் சார்ந்தது. அதற்குத் தொழில்நுட்பம் மட்டுமே உதவி செய்துவிட முடியாது. கணினியோ சந்தையோ இதைச் சாதிக்க முடியாது. எனவே, வியாபார தந்திரங்கள் கல்வித் துறையில் வெற்றிபெறாமல் போவதில் வியப்புக்கே இடமில்லை.

தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!

.பன்னீர் செல்வம்- முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை 

நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசைமாற்று வாரியம்

நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகரவளர்ச்சி ஆணையம்

எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை

பி.மோகன்-ஊரக தொழில்கள்துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித் துறை.

பா.வளர்மதி-சமூக நலம் மற்றும்சத்துணவு திட்டத் துறை

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை.

பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை

செல்லூர் கே.ராஜூ-கூட்டுறவு மற்றும்முன்னாள் படைவீரர்கள் நலத் துறை

ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர்பாதுகாப்புத் துறை

பி.தங்கமணி-தொழில் துறை. வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை

எம்.சி.சம்பத்-வணிகவரிகள் மற்றும்பதிவுத் துறை

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-வேளாண்மைத்துறை

எஸ்.பி.வேலுமணி-நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, ஊழல் தடுப்பு

டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை

எஸ்.கோகுலஇந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல்துறை

எஸ்.சுந்தரராஜ்-இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும்அறநிலையங்கள் துறை

எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கழகம்

என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர்நலத் துறை

கே..ஜெயபால்-மீன்வளத் துறை

முக்கூர் என்.சுப்பிரமணியன்-தகவல்தொழில்நுட்பத் துறை

ஆர்.பி.உதயகுமார்-வருவாய்த் துறை

கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும்விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள்செயலாக்கத் துறை

பி.வி.ரமணா - பால்வளத் துறை

கே.சி.வீரமணி-பள்ளிக்கல்வித் துறை

எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத்துறை

தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை

டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராமதொழில்கள் வாரியம்.

எஸ்.அப்துல் ரஹீம்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர் நலத் துறை.