Tuesday, 5 August 2014

இன்று பி.எட். கலந்தாய்வு தொடக்கம்.

பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் 4 இடங்களில் புதன்கிழமைதொடங்க உள்ளது.அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2,155 இடங்களுக்கு இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

சனிக்கிழமை (ஆகஸ்ட்9) வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக வளாகத்திலும், மதுரையில் செயின்ட் ஜஸ்டின்ஸ் கல்வியியல் கல்லூரியிலும், கோவையில் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியிலும், சேலத்தில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியிலும் ஆன்-லைன்மூலம் ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதங்கள் ஏற்கெனவே மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment