திருநெல்வேலி, ஆக. 14-சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 ஜி, 3 ஜி வாடிக்கையாளர்களுக்குசிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம்வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்புசலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 ஜி, 3 ஜி வாடிக்கை யாளர்களுக்கு 14 ம் தேதி முதல்நவம்பர் 11ம் தேதி வரை90 நாள்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளித்துள்ளது.அதன்படி ரூ.100, ரூ.150, ரூ. 250 மற்றும் ரூ.350-க்குசெய்யப்படும் ’சி’ டாப் அப்களுக்குமுழு டாக்டைம் வழங்குகிறது.மேலும், ரூ. 550 மற்றும்ரூ.750- க்கு செய்யப்படும் ’சி’ டாப் அப்களுக்கு முறையே ரூ. 575, ரூ. 790-க்கான டாக் டைம் வழங்குகிறது.ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச கட்டணத்தைவிட கூடுதல் டாக்டைம் வழங்கும்சி-டாப் அப் வவுச்சர்களுடையடாக்டைம் அதிகமாக இருந்தால், ஏற்கெனவேஅறிவிக்கப்பட்ட அந்த கூடுதல் சலுகைக்கட்டணம் பொருந்தும்.ரூ.561 சிறப்புக் கட்டணடேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 30 முதல் 60 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 5 ஜி.பி. இலவசமாக பயன்படுத்தலாம். மேலும், கூடுதல் டேட்டாபயன்பாட்டுக்குஒவ்வொரு 10 கே.பி.க்கும்2 பைசா கட்டணம் ஆகும்.ரூ.821 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கானவேலிடிட்டி 60 முதல் 90 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 7 ஜி.பி. இலவசமாக பயன்படுத்தலாம். கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்குஒவ்வொரு 10 கே.பி.க்கும்2 பைசா கட்டணம் ஆகும். ரூ.1011 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கானவேலிடிட்டி 30 முதல் 90 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. இலவசமாகப்பெறலாம்.மேலும், கூடுதல் டேட்டாபயன்பாட்டுக்கு ஒவ்வொரு கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் ரூ.1949 சிறப்புக்கட்டண டேட்டாவவுச்சருக்கான வேலிடிட்டி 60 முதல் 90 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 20 ஜி.பி. இலவசமாகப்பெறலாம். கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்குஒவ்வொரு 10 கே.பி.க்கும்2 பைசா கட்டணம் ஆகும். இந்தசிறப்பு சலுகை சென்னை உள்படதமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவேஇந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்றுபயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்Friday, 15 August 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment