Friday, 15 August 2014

முதுநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு:

 முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட்22-ஆம் தேதி
தொடங்கி 27-ஆம்தேதி வரை நடத்தப்படுகிறது.பொறியியல்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வைஅண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இளநிலைபொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை அண்மையில் முடிவுற்ற நிலையில், முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளில் சேருவதற்கானகலந்தாய்வு இப்போது நடைபெற உள்ளது.
       இதற்குவிண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு தேதி ஆகிய விவரங்கள்http://www.annauniv.edu/tanca2013/ என்றபல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

      "கேட்' (பொறியியல் பட்டதாரிநுண்ணறித் தேர்வு) தேர்வில் தகுதிபெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதியும், "டான்செட்' (தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு) தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு 23ஆம்தேதியிலிருந்து 27ஆம் தேதி வரையும்கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

0 comments:

Post a Comment