சென்னை, ஆக.15-மதுரை தயா என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் மாணவ-மாணவிகளை முதலாம் ஆண்டு சேர்ப்பதற்கான கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொது கலந்தாய்வுக்கு வெளியிடப்பட்ட ரேங்க் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும்.ஏற்கனவே கலந்தாய்வில் கலந்துகொண்டு மற்ற கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது. எந்த மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லையோ அந்த மாணவர்கள் தயா என்ஜினீயரிங் கல்லூரிக்கு நடத்தப்படும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 18-ந்தேதி காலை 9-30 மணி முதல் மாலை 5-30 மணிக்குள் நேரில் வந்து பெயர்களை பதிவு செய்யவேண்டும். அவர்களுக்கு 19-ந் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.இந்த தகவலை தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment