புதுடெல்லி,
கொடி காத்த குமரனுக்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை அமைக்கக் கோரி திருப்பூர் கொடி காத்த குமரன் இளைஞர் பேரவை சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று காலை வீதி நாடகம் நடத்தப்பட்டது.
திருப்பூர் குமரன் கலைக்குழுவை சார்ந்த கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குமரனின் இறுதிக் கால நிகழ்வுகளை வீதி நாடகமாக நிகழ்த்திக் காட்டினர்.
மேலும், கொடி காத்த குமரன் நினைவு நாளான ஜனவரி–11–ந் தேதி தேசப்பற்று மற்றும் அகிம்சை தினமாக அறிவிக்க கோரியும், அவர் பிறந்த இடத்தில் நினைவு மண்டபம் அமைக்ககோரியும் அது தொடர்பான முக்கிய ஆவணங்களுடன் பிரதமர் அலுவலகத்தில் மனு ஒன்றும் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.சரவணன் தலைமை தாங்கினார்.






0 comments:
Post a Comment