Friday, 24 October 2014

வேலைவாய்ப்பு அலுவலகத்தில்குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

கடலூர்:டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 போட்டி தேர்வுக்காக கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு வரும் 27ம்தேதி முதல் துவங்குகிறது.

கலெக்டர் சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள 4,963 காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், போட்டித் தேர்வு டிசம்பர் 22ம் தேதி நடக்கிறது.இத்தேர்வில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். இத்தேர்வுக்கு இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இப்போட்டித் தேர்வுக்கு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் 27ம் தேதியிலிருந்து இலவச பயிற்சி வகுப்பு துவங்கிறது.

தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் இலவச பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். இதற்கான வகுப்புகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நடக்கிறது. தடுப்புக் கட்டையில் மோதிகடலூர் அடுத்த குண்டியமல்லூரில் உள்ள பெருமாள் ஏரி நிரம்பிய நிலையில் ஏரிக்கு வந்து கொண்டுள்ள உபரி நீர் பூவாணிக்குப்பம் கிராமத்தில் உள்ள மதகு வழியாக வெளி@யற்றப்பட்டு வருகிறது.
கடலூர் பகுதியில் கடந்த பத்து நாட்களாக பெ#த கனமழை காரணமாக மருதாடு பெண்ணையாற்றில் தடுப்பணை நிரம்பி மழைநீர் வழிந்தோடுகிறது.

0 comments:

Post a Comment