மெட்ராஸ்ஐ’ என்று சொல்லக்கூடிய கண்நோய் சென்னையில் வேகமாக பரவுகிறது. இந்தநோய் கோடை காலத்தில் மட்டுமல்லகுளிர் காலத்திலும் வரக்கூடியது. ‘அடினோ’ என்ற வைரஸ்கிருமி மூலம் கண் நோய்பரவுகிறது. தற்போது அரசு மற்றும்தனியார் மருத்துவமனைகளில்
கண் நோய் பாதித்தபலர் சிகிச்சை பெற்று செல்வதை காணமுடிகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரையும் இது பாதிக்க கூடியது.இதுகுறித்துஅகர்வால் கண் மருத்துவமனையின் கண்ஆலோசகர் டாக்டர் சவுந்தரி கூறியதாவது: ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு தற்போதுஅதிகரித்து வருகிறது. தினசரி 10 நோயாளிகள் கண் நோய் பாதித்துசிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்நோய்பாதித்தவர்களை மற்றவர்கள் பார்ப்பதனால் தங்களுக்கும் இந்நோய் பரவும் என்றுமக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிகப்பாக இருக்கும். ரத்த வீக்கம் காணப்படும். கண்ணில்இருந்து நீர் வடியும். கண்உருத்தல் இருக்கும்.
காலையில்கண் விழிக்கும்போது கண்களை திறக்க கடினமாகஇருக்கும். கண்கள் ஒட்டி காணப்படுவதுபோன்றவை கண் நோயின் அறிகுறிகளாகும்.
கண்ணில்இருந்து வடியும் நீரினால் இந்நோய்மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதிப்புள்ளஅந்த நீர் பிறர் கையில்படும்போது அவருக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்புஉள்ளது.
ஒரு குடும்பத்தில் ஒரு வருக்கு வந்தால்மற்றவர்களுக்கு வரும். கண் நோய்பாதித்தவர்கள் படுக்கை, துண்டு போன்ற வற்றைமற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அதன் மூலம்அவை பரவும்.
எனவே கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள்கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்கவேண்டும். கண் நோய் வந்தால்குறைந்தது ஒரு வாரம் முதல்10 நாட்கள் வரை இருக்கும். அருகில்உள்ள கண் மருத்துவரை அணுகிமுறைவான சிகிச்சை பெற வேண்டும். மருந்துகடைகளில் சொட்டு மருந்து வாங்கிதானே போட்டு கொள்ளக் கூடாது.
இவ்வாறுஅவர் கூறினார்.
0 comments:
Post a Comment