மதுரை, வடக்கு வட்டத்தில் நில அளவைத்துறை துணைஆய்வாளராக பணியாற்றிய பாண்டி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு:
நில அளவைத்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றியபோது31.1.1999ல் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. நில அளவராக பணியாற்றியபோது 1.11.1965ல் எனதுபணி ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்
படி 4.12.1971ல்நில அளவை துணை ஆய்வாளராகபதவி உயர்வு வழங்கி இருக்கவேண்டும். ஆனால் எனக்கு பதவிஉயர்வு வழங்கவில்லை. அதேநேரம் இரு உத்தரவுகளில் 530 பேருக்கு4.12.1971 முதல் கணக்கிடப்பட்டு பணப்பலன்கள் வழங்கப்பட்டது.ஆனால் எனக்கு மட்டும் 6.8. 2010 முதல்கணக்கிட்டு பணப்பலன்கள் வழங்கப்பட்டது. 530 பேருக்கு வழங்கியதை போல எனக்கு சேரவேண்டியபணப்பலன்களை 4.12.1971 முதல் வழங்கி, எனதுஓய்வூதியத்தை திருத்தி அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, 530 பேருக்கு வழங்கியதைப் போல, மனுதாரருக்கும் 4.12.1971 முதல் பணப்பலன்களைவழங்க வேண்டும். இதன்படி அவரது ஓய்வூதியத்தை3 மாதத்திற்குள் திருத்தியமைக்க வேண்டும், என வருவாய்துறை செயலாளருக்குஉத்தரவிட்டார்






0 comments:
Post a Comment