Sunday, 12 October 2014

ஹுத்ஹுத் புயலுக்கு ஒடிசாவில் 2 பேர் பலி

ஹுத்ஹுத் புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் 2 பேர் பலியாகினர்.
ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில், மீனவர் ஒருவர் தனது படகை பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்த முயன்ற போது கடல் கொந்தளிப்பில் சிக்கி
பலியானார். இத்தகவலை புரி மீட்புப் பணிகள் ஆணையர் பி.கே.மொஹபத்ரா தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் எச்சரிக்கையும் மீறி அந்த மீனவர் சென்றதாலேயே பலியானதாக தெரிகிறது. இதுவரை மீனவரின் அடையாளம் காணப்படவில்லை.
கேந்தரப்பா மாவட்டத்தில் மக்களை வெளியேற்றும் மீட்புப் படகு கழிழ்ந்ததில் 9 வயது சிறுமி ஒருவர் பலியானார். இதேபோல் அதே மாவட்டத்தில் 9 வயது சிறுவன் ஒருவரைக் காணவில்லை.

0 comments:

Post a Comment