Sunday, 12 October 2014

ஹூட் ஹூட் புயல் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் மோடி உறுதி

ஹூட் ஹூட் புயல் காரணமாக கனமழையினால் ஒடிசா மற்றும் ஆந்திராவில் 5 பேர் பலியாகினர். இருமாநிலங்களிலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹூட் ஹூட் புயல் கரையை கடந்தது. புயல் கரையைக் கடப்பதையொட்டி ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இரவுமுதல் கனமழை பெய்து வருகிறது. விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. பலத்த காற்றுடன் மழை பெய்தபோது விசாகப்பட்டினம் மற்றும் பிற மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொலைபேசி, மின்சார கம்பங்களும் சாய்ந்தன. தொலை தொடர்பும் பாதிக்கப்பட்டது. சாலையில் நின்ற வாகனங்களி தூக்கி எறியப்பட்டன. மாலை 6 மணிவரையில் பலத்த காற்று வீசும் என்றும் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் புயல் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி கேட்டறிந்தார். மேலும்  புயல் நிவாரண பணிகளுக்கும், மீட்பு பணிகளுக்கும் தேவையான உதவியை மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்

0 comments:

Post a Comment