கடந்த 10/08/2014 அன்று பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் TET தாள் 2 இல் தேர்ச்சிப் பெற்ற 31 பேரில்
11,000 பேருக்கு மட்டுமே மன நிம்மதியை அளித்து மீதமுள்ளோருக்கு கடந்த ஓராண்டு காலத்தில் அனுபவித்தை விட மேலும் துன்பத்தை அதிகப் படுத்துவதாய் அமைந்தது.அதிலும் நூலிழையில் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்கள் மற்றவர்களை விட அதிக துன்பத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.இதை அவர்களது மனநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் தெரியும்.
அப்படி நூலிழையில் வாய்ப்பினை இழந்தவர்களுக்கு ஆறுதலாய் அமைய பிற்படுத்தப் பட்ட , ஆதி திராவிட நலத்துறை மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளுக்கான காலிப் பணியிட அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.இதற்கான மொத்த காலிப் பணியிட விவரம் மற்றும் பாட வாரியான காலிப் பணியிடம் குறித்த விவரம் (விரைவில்) வெளியாகும்.
வழக்குகளின் நிலவரம்
ஏற்கனவே 5% தளர்விக்கு எதிரான வழக்கும்,G.O MS 71 க்கு எதிரான வழக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதே நேரத்தில் இன்றும் 40 க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களையும் மேற்கண்ட வழக்குகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தின்(petition) கீழ் இடம் பெரும் வகையில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.அதோடு வருகின்ற 18/08/2014 அன்று இந்த மனுவின் கீழ் விசாரணை நடைபெற உள்ளது.






0 comments:
Post a Comment