Wednesday, 13 August 2014

PGTRB :வணிகவியல் ஆசிரியர் தகுதித் தேர்வைரத்து செய்யக்கோரி வழக்கு.

முதுகலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு பதிலளிக்குமாறு, தேர்வாணைய உறுப்பினர் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலவளவைச் சேர்ந்த ஜி. முத்து தாக்கல் செய்துள்ளமனு விவரம்:அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட். பட்டம் பெற்றிருக்கிறேன். 2013 ஜூலை 21இல் ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தகுதித் தேர்வை எழுதினேன். அதில், மொத்தம் 146 மதிப்பெண்களுக்கு 101 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. நான் 60 சதவீதம் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி.இந்தப் பிரிவில் கட்-ஆப் மதிப்பெண் 102 ஆக உள்ளதால், தகுதி பெறவில்லை. கேள்வித்தாள் அமைப்பு மற்றும் கீ ஆன்சர் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகளால் எனது மதிப்பெண் குறைந்துள்ளது. 300 காலிப் பணியிடங்களை நிரப்ப 354 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 முறை இதற்கான பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பிய மனு மீது தேர்வாணையம்நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, 2014 ஆகஸ்ட் 8ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புக்குத் தடைவிதிக்க வேண்டும். மேலும், 2013 மே 9 ஆம் தேதி வெளியிட்ட முதுகலை வணிகவியல் தேர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.கே. சசிதரன், மனுவுக்கு பதிலளிக்குமாறு, ஆசிரியர் தேர்வாணைய உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment