Monday, 4 August 2014

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கவேண்டும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


புதுடெல்லி, ஆக.5-தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் கூடுதல் இடங்களை ஒதுக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவிட்டது.69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குதமிழகத்தில் தற்போது மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதாக கூறி தமிழகத்தை சேர்ந்த அட்சயா, ஹரிணி உள்ளிட்ட 4 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால் கவுடே ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் விஜயன், சிவபாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள். வக்கீல் விஜயன் தனது வாதத்தில் கூறியதாவது:-கூடுதலாக 19 சதவீத ஒதுக்கீடு தேவைதமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருப்பதால் பிளஸ்-2 பொதுத்தேர்வில் பொதுப்பிரிவு மாணவர்கள் 200-க்கு 199 மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட அவர்களுக்கு இந்த ஒதுக்கீட்டுக் கொள்கையால் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. எனவே, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கூடுதலாக 19 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்தால் பொதுப்பிரிவு மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றவேண்டும்இந்தக் கோரிக்கை கடந்த 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 சதவீதத்துக்குக் கீழ் உள்ளவர்களுக்கு புதிதாக இடங்கள் உருவாக்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.கடந்த 25 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்தப் பிரச்சினையைப் பற்றி விசாரிக்க இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றவேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார். நீதிபதிகள் மறுப்புஇதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இந்த மனுவின் மீதான விசாரணையே இன்னும் முடிவடையாத நிலையில் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற இயலாது என்று தெரிவித்தனர். மேலும், ‘‘தமிழக அரசு பொதுப்பிரிவினருக்கு மருத்துவம், பொறியியல் படிப்பில் 19 சதவீத இடங்களை உருவாக்கித் தரவேண்டும். 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வக்கீல் விஜயன் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதற்கு மனுதாரர் தரப்பில் மூன்று வாரங்களுக்குள் எதிர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். தமிழக அரசின் சார்பில் ஆஜரான ராகேஷ் திவிவேதி, சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment