Thursday, 7 August 2014

சுதந்திர தினத்தை மிட்டாயோடு முடிச்சுறாதீங்க- கல்வித்துறை

சிவகங்கை : சுதந்திரத்தினம் என்பது பெரும்பாலான அரசு பள்ளிகளில் கொடி ஏற்றுவது, மிட்டாய் கொடுப்பதோடு முடிந்து விடுகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தன்று, பள்ளிகளில் கொடியேற்றி தேசிய கொடியின் வரலாற்றை கட்டாயம் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மாவட்ட கல்வி அலுவ௦லகங்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கை: சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் சுதந்திர போராட்ட வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகம், பட்ட இன்னல்கள், தேசிய கொடி வரலாற்றை, எடுத்துரைக்க வேண்டும். கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். ஆக.15 அன்று காலை கொடியேற்றி, நாட்டுபற்று, பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும்.
அன்றைய தினம், மரங்களின் அவசியத்தை உணர்த்தி, மரக்கன்றுகள் நடவேண்டும். தேசிய கொடியின் மாண்பு, தேசிய கீதத்தின் மதிப்பை உணர்த்த வேண்டும். பள்ளி வளர்ச்சியில் அக்கறை உள்ள பெற்றோர், கிராம தலைவர்கள், எம்.எல்.ஏ., பழைய மாணவர்களை விழாவில் பங்கேற்க செய்ய வேண்டும். இவற்றை பின்பற்றாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment