பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு முதலிடம் வழங்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின்படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை கவலையளிக்கிறது.
அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் ஆங்கிலப் பாடத்திற்கு 2,822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன், மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும்.
ராமதாஸ் கோரிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

0 comments:
Post a Comment