சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் சிசாட் தேர்வு கிராமப்புற இந்தி பேசும் மாணவர்களுக்குப் பாதகமாக இருப்பதாகக் கூறி, இத்தேர்வு முறையை மாற்றி அமைக்கும்படி இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போதைய முதல்நிலைத் தேர்வு கிராமப்புற, கலைப்புலப் படிப்புகளைப் படித்த மாணவர்களுக்குப் பாதகமாக இருப்பதாக தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன் கேள்வித்தாளை ஆங்கிலம் தவிர, இந்தியில் தரும்போது, பிராந்திய மொழிகளிலும் தந்தால் என்ன என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2011-ஆம் ஆண்டில் முதல்நிலைத் தேர்வில் புதிய மாற்றங்களை அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் நீதிமன்றத்தை அணுகினார்கள். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழு இன்னமும் அறிக்கை சமர்ப்பித்தபாடில்லை.
முதல்நிலைத் தேர்வுகளில் 2010-ஆம் ஆண்டு வரை விருப்பப் பாடத்தில் 120 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு 300 மதிப்பெண்கள். ஜெனரல் ஸ்டடீஸ் பாடத்தில் 150 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். 2011-ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டது.
“சிசாட் தேர்வு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட அதை எடுத்துவிட வேண்டும் என்பதில்லை. வங்கித் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளிலும் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. சிசாட் தேர்வில் உள்ள இங்கிலீஷ் காம்பிரிஹென்சன்தான் கடினமாக இருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்குப் பாதகமாக இருக்கிறது. எனவே, அதில் கடினமான பகுதிகளை எடுத்து விடலாம்.
“சிசாட் தேர்வு நகர்ப்புற மாணவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள், முதல்நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டடீஸ் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, சிசாட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மெயின் தேர்வுக்குத் தேர்வாகி விடுகின்றனர். எனவே, முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்களுக்கும் சமமான வெயிட்டேஜ் கொடுக்க வேண்டும் அல்லது ஜெனரல் ஸ்டடீஸ் மதிப்பெண்களைக் கொண்டு தகுதிப் பட்டியல் தயாரிக்க வேண்டும்” என்கிறார் சங்கர் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் டி. சங்கர்.
“மாற்றம் என்பது நிரந்தரம். இதைத் தவிர்க்க முடியாது. சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் தேர்வாகிறவர்கள் ஐஎஃப்எஸ் போன்ற வெளிநாட்டுப் பணிகளில் கூட அமர்த்தப்படுவார்கள். சட்டம், கொள்கை வகுக்கும் முக்கிய நிர்வாகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஜெனரல் ஸ்டடீஸ் பாடத்தைப் படிக்க இரண்டு ஆண்டுகள் செலவிடுவதைப் போல ஆங்கிலம் கற்கவும் இரண்டாண்டுகள் செலவிட்டால் அதிலும் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். கேள்வித்தாள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருப்பதைப் போன்று 22 இந்திய மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும்” என்கிறார் கோவையில் சிவில் சர்வீஸ் தேர்வு மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து வரும் பேராசிரியர் கனகராஜ்.
“வட மாநில மாணவர்களைப் பொருத்தவரை முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்களிலும் உள்ள 180 கேள்விகளில் 172 கேள்விகளை தாய்மொழியான இந்தியில்தான் எதிர்கொள்கிறார்கள். ஆங்கிலப் பகுதியில் உள்ள 8 வினாக்கள்தான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. தமிழக மாணவர்களைப் பொருத்தவரை, தாய்மொழியில் வினாத்தாள் இல்லை. அத்துடன் சிசாட் தேர்வில் அதாவது இரண்டாம் தாளில் உள்ள திறனறித் தேர்வுக் கேள்விகள் நகர்ப்புற மாணவர்களுக்குச் சாதகமானவை.
“கிராமப்புற மாணவர்களைப் பொருத்தவரை, சிசாட் தேர்வு வடிகட்டும் தேர்வு போல அமைந்து விட்டது. ஜெனரல் ஸ்ட்டீஸ் தேர்வில் நல்ல திறமை பெற்ற மாணவர்கள், மெயின் தேர்வுக்குத் தகுதி பெற முடியாமல் போய் விடுகிறார்கள். சிசாட் தேர்வில் தகுதி பெறும் பல மாணவர்களால், மெயின் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை. சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெறுவதாக செய்திகள் வருகின்றன. கடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நூறு பேரில் 2 பேர்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் ஏற்கெனவே சர்வீசில் இருந்து கொண்டு தேர்வு எழுதியவர்கள். எனவே, சிசாட் தேர்வை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்” என்கிறார் அவர்.
முதல்நிலைத் தேர்வில் கொண்டு வரப்பட்ட புதிய மாற்றங்கள் குறிப்பாக தமிழகத்தில் கலைப் படிப்புகளை எடுத்துப் படித்த மாணவர்களுக்குப் பாதகமாக இருக்கிறது. திறனறித் தேர்வை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள். அத்துடன், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைப்பதைப் போல தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கேள்விகள் தரப்படுவதில்லை.

ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வினாத்தாளில் திறனறி வினாக்களும், ஆங்கில வினாக்களும் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாதகமாக உள்ளதாகத் தெரிவித்து போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர். இந்தப் பிரச்சினையில் தமிழக மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்நிலைத் தேர்வுகளில் 2010-ஆம் ஆண்டு வரை விருப்பப் பாடத்தில் 120 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு 300 மதிப்பெண்கள். ஜெனரல் ஸ்டடீஸ் பாடத்தில் 150 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். 2011-ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, முதல் தாளில் ஜெனரல் ஸ்டடீஸ் பாடப்பிரிவில்100 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு 200 மதிப்பெண்கள். இரண்டாம் தாள் திறனறிவுத் தேர்வு குறித்தது. விருப்பப் பாடத்துக்குப் பதிலாக இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டாம் தாளில் 80 கேள்விகள் கேட்கப்படும். அதில் இங்கிலீஷ் காம்பிரிஹென்சன், இன்டர் பெர்ஸனல் ஸ்கில்ஸ், லாஜிக்கல் ரீசனிங், நியூமரிக்கல் எபிலிட்டி, மென்டல் எபிலிட்டி, ப்ராப்ளம் சால்விங், டேட்டா இன்டர்பிரட்டேஷன், டெசிஷன் மேக்கிங் போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜெனரல் ஸ்டடீஸ் தாளில் குறைந்தது 30 மதிப்பெண்களும் சிசாட் தேர்வில் 70 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும் என்பது புதிய விதிமுறை.
“சிசாட் தேர்வு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட அதை எடுத்துவிட வேண்டும் என்பதில்லை. வங்கித் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளிலும் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. சிசாட் தேர்வில் உள்ள இங்கிலீஷ் காம்பிரிஹென்சன்தான் கடினமாக இருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்குப் பாதகமாக இருக்கிறது. எனவே, அதில் கடினமான பகுதிகளை எடுத்து விடலாம்.
இத்தேர்வில், தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இருப்பதால், விடை தவறாகப் போகும்போது ஏற்கெனவே சரியான விடை அளித்ததற்காக கிடைத்த மதிப்பெண்களிலிருந்தும் மதிப்பெண்களை இழக்க நேரிடுகிறது. முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயித்துவிட்டு, அதில் ஜெனரல் ஸ்டடீஸ் தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே மெயின் தேர்வு தகுதிக்குக் கணக்கிடப்பட வேண்டும்” என்கிறார் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக 2011-ஆம் ஆண்டிலிருந்து தயாராகி வரும் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தினேஷ்.
“சிசாட் தேர்வு நகர்ப்புற மாணவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள், முதல்நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டடீஸ் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, சிசாட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மெயின் தேர்வுக்குத் தேர்வாகி விடுகின்றனர். எனவே, முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்களுக்கும் சமமான வெயிட்டேஜ் கொடுக்க வேண்டும் அல்லது ஜெனரல் ஸ்டடீஸ் மதிப்பெண்களைக் கொண்டு தகுதிப் பட்டியல் தயாரிக்க வேண்டும்” என்கிறார் சங்கர் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் டி. சங்கர்.
“மாற்றம் என்பது நிரந்தரம். இதைத் தவிர்க்க முடியாது. சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் தேர்வாகிறவர்கள் ஐஎஃப்எஸ் போன்ற வெளிநாட்டுப் பணிகளில் கூட அமர்த்தப்படுவார்கள். சட்டம், கொள்கை வகுக்கும் முக்கிய நிர்வாகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஜெனரல் ஸ்டடீஸ் பாடத்தைப் படிக்க இரண்டு ஆண்டுகள் செலவிடுவதைப் போல ஆங்கிலம் கற்கவும் இரண்டாண்டுகள் செலவிட்டால் அதிலும் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். கேள்வித்தாள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருப்பதைப் போன்று 22 இந்திய மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும்” என்கிறார் கோவையில் சிவில் சர்வீஸ் தேர்வு மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து வரும் பேராசிரியர் கனகராஜ்.
“வட மாநில மாணவர்களைப் பொருத்தவரை முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்களிலும் உள்ள 180 கேள்விகளில் 172 கேள்விகளை தாய்மொழியான இந்தியில்தான் எதிர்கொள்கிறார்கள். ஆங்கிலப் பகுதியில் உள்ள 8 வினாக்கள்தான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. தமிழக மாணவர்களைப் பொருத்தவரை, தாய்மொழியில் வினாத்தாள் இல்லை. அத்துடன் சிசாட் தேர்வில் அதாவது இரண்டாம் தாளில் உள்ள திறனறித் தேர்வுக் கேள்விகள் நகர்ப்புற மாணவர்களுக்குச் சாதகமானவை.
இந்தக் கேள்வி முறையில் நல்ல பரிச்சயம் உள்ள ஐஐடி, ஐஐஎம் மாணவர்கள் எளிதாக நல்ல மதிப்பெண்களைப் பெற்று விடுகிறார்கள். அவர்களால் ஜெனரல் ஸ்டடீஸ் தாளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாமல் போனாலும்கூட, சிசாட் தேர்வில் பெற்ற அதிக மதிப்பெண்களை வைத்து மெயின் தேர்வுக்குத் தகுதி பெற்று விடுகிறார்கள்” என்கிறார் சிவில் சர்வீஸ் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், சிவில் சர்வீஸ் தேர்வும் எழுதி வரும் சிபிகுமரன்.
“கிராமப்புற மாணவர்களைப் பொருத்தவரை, சிசாட் தேர்வு வடிகட்டும் தேர்வு போல அமைந்து விட்டது. ஜெனரல் ஸ்ட்டீஸ் தேர்வில் நல்ல திறமை பெற்ற மாணவர்கள், மெயின் தேர்வுக்குத் தகுதி பெற முடியாமல் போய் விடுகிறார்கள். சிசாட் தேர்வில் தகுதி பெறும் பல மாணவர்களால், மெயின் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை. சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெறுவதாக செய்திகள் வருகின்றன. கடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நூறு பேரில் 2 பேர்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் ஏற்கெனவே சர்வீசில் இருந்து கொண்டு தேர்வு எழுதியவர்கள். எனவே, சிசாட் தேர்வை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்” என்கிறார் அவர்.
முதல்நிலைத் தேர்வில் கொண்டு வரப்பட்ட புதிய மாற்றங்கள் குறிப்பாக தமிழகத்தில் கலைப் படிப்புகளை எடுத்துப் படித்த மாணவர்களுக்குப் பாதகமாக இருக்கிறது. திறனறித் தேர்வை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள். அத்துடன், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைப்பதைப் போல தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கேள்விகள் தரப்படுவதில்லை.
அதுவும் தமிழக மாணவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகளை மாற்றி அமைப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் மத்திய அரசும் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில மாணவர்களுக்கும் அனைத்துப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் சமநிலையிலான தேர்வு முறையைக் கொண்டு வர வேண்டும் என்பதே பலரது கோரிக்கை.
அரசு கொண்டு வரும் எந்த மாற்றங்களும் கிராமப்புற மாணவர்களைப் பாதித்துவிடக் கூடாது. தேர்வுக்கான தேதி நெருங்கி வரும் சூழ்நிலையில், புதிய மாற்றங்கள் செய்யப்படும் வரை இத்தேர்வு ஒத்தி வைக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. மாணவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விரைவில் முடிவை அறிவிப்பது நல்லது.
0 comments:
Post a Comment