Sunday, 17 August 2014

நிலவில் வேற்றுக் கிரகவாசி போல் காட்சியளித்தது வெறும் தூசியே: நாசா விளக்கம்

வீடியோ பதிவில் இருந்து எடுத்த காட்சி
வீடியோ பதிவில் இருந்து எடுத்த காட்சி
சமீபத்தில் நிலவில் ஒரு வேற்றுக் கிரகவாசி இருப்பதுபோல் தெரிந்த வீடியோ பதிவு மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால், அங்கு வேற்றுக் கிரகவாசிகள் வசிக்கிறார்களா என்று விவாதங்கள் எழுந்தன.

ஆனால், இந்த விவாதங்களுக்கும் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்த வீடியோ பதிவில் தெரியும் புகைப்படம் வெறும் தூசியோ அல்லது புகைப்பட நெகட்டிவில் ஏற்பட்ட கீறலோதான் என்று அமெரிக்க விண்வெளி மையமான நாசா விளக்கம் அளித்துள்ளது.
‘வாவ்ஃபார்ரீல்’ (Wowforreel) என்ற யூ-ட்யூப் கணக்கிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இந்த வீடியோ பதிவை, ஒரே மாதத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கின்றனர்.
நாசா விஞ்ஞானிகளின் தகவலின்படி, இந்தப் புகைப்படம் 1971-ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அப்போலா 15 விண்கலத்தில் இருந்தோ அல்லது 1972-ஆம் ஆண்டுச் செலுத்தப்பட்ட அப்போலா 17 விண்கலத்தில் இருந்தோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
“ படச்சுருளில் இதுபோல பாழாவது டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகாத காலத்தில் நடப்பது சகஜம்", என்று விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார்.
இணையதளத்தில் இந்த வீடியோ பதிவு ஏன் பிரபலமானது என்பதற்கு, ‘Pareidolia’ என்ற உளவியல் நிகழ்வே காரணமாக உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
மனித முகங்களையோ அல்லது அதுபோன்ற சில பொருட்களையோ பார்க்கும்போது, அதனை நமது மூளை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதைப் பொருத்து நிகழும் நிகழ்வுகள்தான் இவை என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment