Tuesday, 19 August 2014

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும்: திண்டுக்கல் மண்டல கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு


கல்வித்துறையில்தமிழக அரசு செயல்படுத்தி வரும்புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும்என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிதெரிவித்தார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் கல்விஅலுவலர்கள் மற்றும் பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும்குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கானஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிதலைமை வகித்தார்.


பள்ளிக் கல்வித்துறை முதன்மைசெயலர் சபீதா, அனைவருக்கும் கல்விதிட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்அமைச்சர் கே.சி.வீரமணிபேசியது:தமிழக அரசு கல்வித்துறைக்குகூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துவருகிறது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, இந்த நிதி ஒதுக்கீடுசெய்ததன் முழு பலனையும் பெறமுடியும். தமிழக மாணவர்கள், கல்வியின்மூலம் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற நோக்கத்தில், தமிழகமுதல்வர் சிறப்பு திட்டங்களை செயல்படுத்திவருகிறார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களில், 10ஆம்வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சிப் பெற்ற234 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிளஸ்2 தேர்வில், இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்தசுமார் 10ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிப்பெறவில்லை. இவர்களின் எதிர்காலம், தவறான வழியில் செல்வதற்குவாய்ப்புள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும்
வகையில், தரத்தில் பின் தங்கிய மாணவர்களின்மீது கூடுதல் கவனம்
செலுத்தி, அவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும். தொடர்ச்சியாக பல
ஆண்டுகள்முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம், பின் தங்கியதற்கான காரணங்களை கண்டறியப்பட வேண்டும். கல்வியில் பின்தங்கிய தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம்பெற்றுள்ளன. தோல்வி நிலையானது இல்லை. இதனை புரிந்து கொண்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும்முயற்சியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். 2011ஆம்ஆண்டு, 71ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறைஇருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக காலிப்பணியிடங்கள்நிரப்பப்பட்டுள்ளன. நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள்நிரப்பப்படும் என்றார் அவர். 2013-14 கல்வியாண்டில்100 சதவீத தேர்ச்சிபெற்ற 13 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 35 உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கும், திண்டுக்கல், தேனி, மதுரை,
விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறந்ததொடக்கப்
பள்ளிகளாகதேர்வு பெற்ற தலா 3 பள்ளிகளுக்கும்கேடயங்கள்
வழங்கப்பட்டன. முன்னதாக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்ற பழனி கல்வி மாவட்டஅளவிலான மாவட்ட சதுரங்கப் போட்டியைஅமைச்சர் கே.சி.மணிதொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து356 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 331 மாணவர்களுக்குவிலையில்லா மடிக்கணினி ஆகியவற்றையும்வழங்கினார். நிகழ்ச்சியில் மக்களைவை உறுப்பினர் எம்.உதயக்குமார், வேடசந்தூர்சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி, மேயர்வி.மருதராஜ்,
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்  ராமேஸ்வரமுருகன், தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர்

பிச்சைஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment