Friday, 1 August 2014

அண்ணாபல்கலைக்கழக கல்லூரிகள் உள்பட என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின பொது கலந்தாய்வு 4-ந்தேதி முடிகிறது


சென்னை, ஆக.2-என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கின. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு சென்றனர்.
ஆனால் இன்னும் பொது கலந்தாய்வு முடியவில்லை. கலந்தாய்வு 4-ந்தேதிதான் முடிவடைகிறது. கலந்தாய்வுதமிழ்நாட்டில் 541 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில மாணவர்களை பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு சேர்ப்பதற்கான பொது கலந்தாய்வு கடந்த ஒரு மாதமாக அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. வகுப்பு தொடங்கியதுமொத்தம் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 77 இடங்களில் 95 ஆயிரம்பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். கலந்தாய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்தும் 48 ஆயிரம் பேர் இதுவரை வரவில்லை. மாணவர்சேர்க்கை 33 சதவீதம். கலந்தாய்வு முடிய இன்னும் 2 நாட்கள் இருந்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி ஆகஸ்டு 1-ந்தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க அண்ணாபல்கலைக்கழகம் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை விடுத்தது. அதையொட்டி நேற்று ஏராளமான என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம்ஆண்டு சேர்ந்த பி.இ., பி.டெக் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கின. அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியிலும் முதலாம் ஆண்டு நேற்று தொடங்கப்பட்டது. நேற்று மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வகுப்புகளுக்குச் சென்றனர். பல கல்லூரிகளில் உள்ள முதல்வர்கள் ‘ராக்கிங்கில் ஈடுபடாதீர்கள்‘ என்று மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள். ராக்கிங்கில் ஈடுபட்டால் என்ன? என்ன தண்டனை? என்றும் அதனால் வாழ்க்கை வீணாக போகும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.6, 7 தேதிகளில் கலந்தாய்வுகலந்தாய்வு 4-ந்தேதி முடிந்தாலும். பிளஸ்-2 தேர்வில் பெயிலான மாணவர்கள் உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியாக கலந்தாய்வு 6-ந்தேதி நடத்தப்பட உள்ளது. அதற்காக மாணவ-மாணவிகள் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து 5-ந்தேதி காலை 9மணி முதல் மாலை 5-30மணிவரை பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.அண்ணாபல்கலைக்கழக கலந்தாய்வில் அருந்ததியின மாணவ-மாணவிகளுக்கு ஓதுக்கப்பட்ட இடங்களில் நிரம்பாமல் சில இடங்கள் காலியாகக்கிடக்கின்றன. அந்த இடங்களில் எஸ்.சி. இன மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வு 7-ந்தேதி நடக்கிறது. விருப்பம் உள்ள எஸ்.சி. மாணவ-மாணவிகள் 7-ந்தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணிவரை தங்கள் பெயரை பதிவு செய்து பின்னர் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். ஏற்கனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களும் கலந்தாய்வுக்கு வரலாம்.இந்த தகவலை அண்ணாபல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment