Tuesday, 5 August 2014

கல்வித் தரத்தை உயர்த்த புதிய முயற்சி: ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் மூலம் 40 ஆயிரம் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பயிற்சி இந்தியாவில் உள்ள 125 கல்லூரிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஏற்பாடு


சென்னை, ஆக.6-கல்வித் தரத்தை உயர்த்த புதிய முயற்சியாக, ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் மூலம் இந்தியாவில் உள்ள 125 என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் 40 ஆயிரம் மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 125 என்ஜினீயரிங் கல்லூரிகளில்...
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் என்ஜினீயரிங் கல்வி தர மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியது. அதன்படி, கடந்த குறிப்பிட்ட சில என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கற்றுக்கொடுத்தனர். அது வெற்றிக்கரமாக நடந்தது.அந்தவகையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதும் 125 என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் 40 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கற்றுக்கொடுக்க உள்ளனர். தமிழ்நாட்டில் 13 என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். இந்த 40 ஆயிரம் மாணவர்களும் அந்தந்த கல்லூரிகளில் அவர்களது பாடப்பிரிவுகளை படிப்பார்கள்.ஐ.ஐ.டி. பேராசிரியர்கள்பொதுவாக 2-வது ஆண்டு சிவில், எலக்ட்ரிகல் உள்பட என்ஜினீயரிங் படிப்பு ஒரே மாதிரியாக தான் இருக்கும். அவற்றில் அடிப்படை பாடப்பிரிவில் இருந்து, 20 பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, 3-ல் ஒரு பங்கு பாடத்தை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நடத்துவார்கள்.இதை மாணவர்கள் இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பாக பார்க்க முடியும். நேரடி ஒளிபரப்பில் பேராசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருக்கும் போது, மாணவ-மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை அவர்கள் இணையதளம் வாயிலாக அந்த பேராசிரியரிடம் கேட்க முடியும். மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு, பேராசிரியர்களும் உடனே பதில் அளிப்பார்கள். பேராசிரியர்கள் 3-ல் ஒரு பங்கு பாடத்தை நடத்திய பின்னர், மீதமுள்ள 2 பங்கு பாடத்தை அந்தந்த கல்லூரி ஆசிரியர்கள், அவர்களுடைய மாணவர்களுக்கு நடத்துவார்கள்.இந்திய தொழில் கூட்டமைப்புகல்விக்கும், தொழிற்சாலைக்கும் இடைவெளி உள்ளது என்று மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் இருக்கிறது. அதை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு கல்வியுடன், என்ஜினீயரிங் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் தொழிற்சாலையில் எப்படி வேலை நடக்கிறது? மாணவர்கள் படிக்கும் படிப்புகள் தொழிற்சாலைகளில் எப்படி பயன்படுகிறது?. என்பது மாணவர்கள் உறுதியாக தெரிந்துக்கொள்ளும் வகையில் இந்த முறை இந்திய தொழில் கூட்டமைப்பு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. இதில் தொழிற்சாலை பற்றி நன்கு தெரிந்த ஒருவர் மாணவர்களுக்கு எடுத்து உரைப்பார். அது சிவில், எலக்ட்ரிகல் உள்பட 15 கம்பெனிகளில் இருந்து வந்து சொல்லித்தருவார்கள். நிறைய பேர், கல்லூரிப்படிப்பிற்கும், வாழ்க்கையில் வேலை செய்வதற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு.500 அல்லது 600 என்ஜினீயரிங் கல்லூரிகளில்...என்ஜினீயரிங் பொறுத்தவரையில், இது தப்பான நோக்கம். கல்லூரியில் சொல்லித்தரும் அடிப்படை கருத்துக்கள் அனைத்தும் தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. அது எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு இந்த கற்றுக்கொடுத்தல் மூலம் எடுத்துரைப்பார்கள்.இந்த ஆண்டு இந்த திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தால், அடுத்த ஆண்டு 500 அல்லது 600 என்ஜினீயரிங் கல்லூரிகளில் கட்டாயம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த பேட்டியின்போது, இந்திய தொழில்கூட்டமைப்பு முன்னாள் தலைவர் பி.சந்தானம், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் அசோக் ஜுன்ஜன்வாலா ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment