சென்னை, ஆக.12- தமிழ்நாடு முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மறியலில் ஈடுபட்டதாக 300 பேர்
கைதானார்கள்.சத்துணவு ஊழியர்கள் மறியல்தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னையில் 300 பேர் கைதுசென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுதலை செய்தனர். 4 ஆயிரம் பேர் கைதுஇதே போல தமிழ்நாட்டின் பல இடங்களிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இதையொட்டி வேலூரில் 450 பேரும், திண்டுக்கல்லில் 1000 பேரும், சேலத்தில் 523 பேரும், ஈரோட்டில் 927 பேரும், திருப்பூரில் 828 பேரும் ஆக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment