Saturday, 2 August 2014

‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ செயற்கைகோள் 2016-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ அதிகாரி சிவன் தகவல்


வேலூர், ஆக.3-‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ செயற்கைகோள் 2016-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அதிகாரி சிவன் தெரிவித்தார்.திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ திரவ எரிபொருள் உந்துவிசை அமைப்பு மையத்தின் இயக்குனர் சிவன் வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிரையோஜெனிக் என்ஜின்நம்மிடம் உள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மிகவும் வெற்றிகரமான ராக்கெட்டாகும். அதே சமயம் இந்த ராக்கெட்டில் மிக அதிக எடைகொண்ட செயற்கைகோள்களை அனுப்ப முடியாது. பெரிய அளவிலான செயற்கைகோள்களை அனுப்ப கிரையோஜெனிக் என்ற என்ஜின் தேவை. இத்தகைய என்ஜின்கள் நம்மிடம் இல்லை. ஆனால் நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் என்ஜினை தயாரித்துள்ளனர். இது பரிசோதனையில் இருந்து வருகிறது. இந்த என்ஜினை உருவாக்குவதில் திரவ எரிபொருள் உந்துவிசை அமைப்புக்கு பெரும் பங்கு உள்ளது. ராக்கெட்டுகள் அனுப்பும்போது செயற்கைகோள்கள் பெரும்பாலும் சரியான பாதையில் செல்வது கிடையாது. அப்படி பாதை மாறி செல்லும் செயற்கைகோள்களை சரியான பாதையில் செலுத்த உந்துவிசை என்ஜின்கள் தேவை. பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. போன்ற செயற்கைகோள்களை இஸ்ரோ, விண்ணில் செலுத்தியதன் மூலம் நம்நாட்டின் பலத்தை உலக நாடுகளுக்கு காட்டி உள்ளோம். 2016-ல் புதிய செயற்கைகோள்‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ என்ற புதிய செயற்கைகோள் 2016-17-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும். இதற்காக 3 நிலை உள்ளது. அதில் இரண்டு நிலைகளின் சோதனை கட்டம் முடிந்துவிட்டது. இன்னும் 2 மாதத்தில் 3-வது நிலையில் சோதனை நடைபெறும். செயற்கைகோள் உதவியுடன் உணவு, தண்ணீர், பருவகால மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம், கல்வி, உடல் நலம், பேரிடர் மீட்பு, தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றில் இந்தியா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. செப்டம்பர் 24-ந் தேதிதிட்டமிட்டபடி வருகிற செப்டம்பர் மாதம் 24-ந் தேதி மங்கல்யான் செயற்கைகோள் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் உள்ளது. இதற்காக மாதிரி விண்கலம் இன்னும் 2 மாதத்தில் அனுப்பி பரிசோதனை செய்யப்படும். தற்போது நாம் பயன்படுத்தும் ஜி.பி.எஸ். கருவிகள் வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை. இதை நம் நாட்டின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி (குளோபல் பொசிசனிங் சிஸ்டம்) உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முறையில் நம்நாட்டை நாம் மட்டுமே கண்காணிக்க முடியும். இதற்காக மொத்தம் 7 செயற்கைகோள்கள் அனுப்பப்படும். முதற்கட்டமாக 2 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment