சென்னை, ஆக.19-சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் கடந்த ஜூலை 26-ந் தேதி சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) நடத்தப்பட்டது. இதில் 1,589 பேரின் குறைகள் தீர்க்கப்பட்டதுடன், 1,339 பாஸ்போர்ட் விண்ணப்பங்களும் பெறப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 ஆயிரம் பாஸ்போர்ட்டுகள் அச்சடிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டன.இதேபோன்று சென்னையில் உள்ள சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் வரும் 23-ந் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை மீண்டும் பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது. இதில் தேவையான ஆவணங்களை வழங்கலாம். கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடந்த மேளாவில் ஒத்திவைக்கப்பட்ட விண்ணப்பங்களின் மனுதாரர்கள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறலாம். அதிகளவு புதிய பாஸ்போர்ட்டுகள் கேட்டு விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதால், மேளாவில் புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment