Sunday, 17 August 2014

செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலை துணைத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் தேர்வு சேவை மையங்களில் விண்ணப்பிக்க 19.08.2014 (செவ்வாய் கிழமை) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலை துணைத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் தேர்வு சேவை மையங்களில் ( NODAL CENTRES) மூலம் 14.08.2014 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
தனித்தேர்வர்கள் நலனுக்காக இறுதி நாள் 19.08.2014 (செவ்வாய் கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது. (15.08.2014, 16.08.2014 மற்றும் 17.08.2014 தேதிகள் நீங்கலாக). ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு சேவை மையங்கள் (Nodal centres) மூலமாக மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்பதால், www.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தேர்வு சேவை மையங்களின் (Nodal Centre) விவரத்தை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

0 comments:

Post a Comment