Wednesday, 13 August 2014

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு 25-ந் தேதி தொடங்குகிறது - TIMETABLE

சென்னை, ஆக.14-தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு செப்டம்பர் 25-ந் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் மாத தேர்வுபொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் படிக்காமல் தனியாக படித்து தேர்வு எழுதுபவர்களுக்கு வருடத்திற்கு
2 முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. அதன்படி செப்டம்பர் மாத எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி தொடங்குகிறது.அதற்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் துறை நேற்று வெளியிட்டுள்ளது. 
அதன் விவரம் வருமாறு:-பிளஸ்-2தேர்வு அட்டவணை செப்டம்பர்
 25-ந் தேதி தமிழ் முதல் தாள்
26-ந் தேதி தமிழ் 2-வது தாள்.
27-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள்
29-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள்
30-ந் தேதி இயற்பியல் ,
 பொருளாதாரம்அக்டோபர் 1-ந் தேதி 
கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ் 4-ந் தேதி 
வணிகவியல், மனை அறிவியல், புவியியல்6-ந் தேதி
 வேதியியல், கணக்குப்பதிவியல்7-ந் தேதி
 உயிரியல், வரலாறு, தாவரவியல்,
 வர்த்தக கணிதம்8-ந் தேதி 
கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், தட்டச்சு9-ந் தேதி அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்
.எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு அட்டவணைசெப்டம்பர் 
25-ந் தேதி தமிழ் முதல் தாள்
26-ந் தேதி தமிழ் 2-வது தாள்
27-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள்
29-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள்
30-ந் தேதி கணிதம்அக்டோபர்
 1-ந் தேதி அறிவியல்4-ந் தேதி சமூக அறிவியல் இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment