தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 19 சதவீத இடங்களை கூடுதலாகஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள பொதுப் பிரிவில் உள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டில் 19 சதவீத இடங்களை கூடுதலாகஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச்சேர்ந்தவர்களுக்கு கல்வியில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலில்உள்ளது. இதனால் நிகழ் கல்வியாண்டில் தங்களால் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி பொதுப் பிரிவில் உள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த அக்ஷ்யா, ஹரிணி, பொன்னாண்டாள்,காருண்யா ஆகிய 4 மாணவிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால் கெüடா அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, மாணவிகள் சார்பில் ஆஜரானவழக்குரைஞர் விஜயன் முன்வைத்த வாதம்: தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் 69 சதவீதஇடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதனால், பொதுப் பிரிவில் உள்ள முற்பட்டவகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் போதுமான "கட்-ஆஃப்' மதிப்பெண்எடுத்திருந்தும் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், தொழிற்கல்வி பயில வாய்ப்புக் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் 50 சதவீதஇடஒதுக்கீடு மட்டுமே அமலில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் வேறு நடைமுறை இருப்பதால் மருத்துவம், தொழில்நுட்பக் கல்லூரிகளில்படிக்க பொதுப் பிரிவில் உள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களால் முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனு, நிலுவையில் உள்ளதால் பாதிக்கப்படும் மாணவர்கள்ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, நீடித்து வரும் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்தவிவகாரம் தொடர்புடைய பிரதான மனுவை அரசியல் சாசனஅமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும்' என்று வழக்குரைஞர் கே.எம்.விஜயன்கேட்டுக் கொண்டார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், "இடஒதுக்கீடு முக்கியமான பிரச்னை என்பதால்,இது குறித்து தமிழகத்தில் உள்ள சூழலை ஆராயாமல் அரசியல் சாசனஅமர்வுக்கு பரிந்துரைக்க இயலாது. எனவே, பொதுப் பிரிவில் உள்ளமுற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர, முந்தைய ஆண்டுகளில் கூடுதலாக 19 சதவீதஇடங்களை ஒதுக்கியதைப் போல நிகழ் கல்வியாண்டிலும் தமிழக அரசு செய்ய வேண்டும். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் 2 வாரங்களுக்குள்ளும், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியுள்ள 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு 4 வாரங்களுக்குள்ளும் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.
பின்னணி: தமிழ்நாட்டில் தொழிற் கல்வியில் குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் 50 சதவீதத்துக்கு மேல்இடஒதுக்கீடு தருவது மண்டல் கமிஷன்பரிந்துரைக்கு எதிரானது என்று கூறி சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர்
விஜயன் 1994-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்தவழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் தொழிற் கல்விகளான மருத்துவம், பல்மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பொதுப் பிரிவு மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகின்றனர். அவர்களின் மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், 69 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் தொடர அனுமதிக்கும் அதே சமயம், பொதுப்பிரிவில் உள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு சேர்க்கையில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து வருகிறது. அதே நடைமுறைதான் இந்த முறையும்கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment