Wednesday, 6 August 2014

உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 16-ந்தேதி 2-வது கட்ட கலந்தாய்வு விண்ணப்பிக்க 14-ந்தேதி கடைசி நாள்


சென்னை, ஆக.7-இந்த வருடம் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்தது. ஆனால் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 600 இடங்களும், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1500 இடங்களும்,
சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 9 ஆயிரம் இடங்களும் நிரம்பாமல் காலியாகக் கிடக்கின்றன. இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் பெயிலானவர்களுக்கு உடனடி தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு (2-வது கட்டம்) 16-ந்தேதி நடத்தப்பட உள்ளது. அதற்காக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பத்தை இன்று முதல் 14-ந்தேதி வரை மாணவ-மாணவிகள் பெற்று அங்கேயே பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பிக்க 14-ந்தேதி கடைசி நாள்.இந்த தகவலை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment