Monday, 10 November 2014

திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம் மத்திய அரசுடன் நடந்த பேச்சு தோல்வி


புதுடெல்லி, நவ.11- அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் நாளை (புதன்கிழமை) நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில்
வங்கிகள் ஈடுபடுகின்றன. பேச்சுவார்த்தைக்கு அழைப்புவங்கி ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 12-ந்தேதி (நாளை) நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்கு அழைத்தது.தோல்விஇதன்படி மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் ஆலோசகர் மித்ராவுடன் 12 வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் வெங்கடாசலம், எல்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த 5-ந்தேதியன்று நடந்த இந்த கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நவம்பர் 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதன்படி, நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை மீண்டும் நடந்தது. ஆனால் இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தன. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் வெங்கடாசலம் மற்றும் எல்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-ஏற்கப்படவில்லைஇன்று (நேற்று) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ) ஏற்கனவே அறிவித்த 11 சதவீதத்திலேயே பிடிவாதமாக இருந்தன. ஆனால் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினராகிய நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்த 25 சதவீதத்தில் இருந்து 23 சதவீதத்துக்கு இறங்கி வந்தோம். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 12-ந்தேதி(நாளை) நாடு முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தொடர் வேலை நிறுத்தம் மேலும் அடுத்த மாதம்(டிசம்பர்) 2-ந்தேதியில் இருந்து 5-ந் தேதி வரை பிராந்திய அளவில் அனைத்து வங்கி ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment