தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1982-ம் ஆண்டு தேர்வான தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான தற்போதைய தமிழக மின் வாரிய தலைவர் கே.ஞானதேசிகன், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கே.ஸ்கந்தன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரமேஷ்குமார் கண்ணா, தொழில் துறை செயலர் சி.வி.சங்கர், உயர்கல்வித் துறை செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வாரியத்தில் பணியாற்றும் லீனா நாயர், தமிழக போக்குவரத்து துறைச் செயலர் டி.பிரபாகர் ராவ் ஆகியோர் கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment