கணினிப்பயிற்றுநர் நேரடி நியமனத்துக்கு தகுதிவாய்ந்தவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப்பட்டியலை சென்னை மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகம் சனிக்கிழமை வெளியிடுகிறது. தமிழக பள்ளி கல்வித்துறையில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள்நேரடி
நியமன முறையில் வேலைவாய்ப்புஅலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில்நிரப்பப்பட உள்ளன.இதற்காக, பி.எஸ்.ஸி., பி.எட்., கணினி அறிவியல், பி.சி.ஏ., பி.எட். முடித்த குறைந்தபட்சம்18 முதல் 57 வயது வரை உள்ளவர்களின்பதிவு மூப்புப் பட்டியல் வேலை வாய்ப்பு அலுவலகஇணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளஅறிவிப்பு: வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும்பதிவு மூப்புப் பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைதகுதியானவர்கள் பார்த்துக்கொள்வது அவசியம்.
அதில், ஏதாவது குறைகள் இருக்குமானால், டிசம்பர்12-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நிவர்த்திசெய்துகொள்ள வேண்டும்.
இந்த நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 24-ஆம் தேதி முதல்30-ஆம் தேதி வரை நடத்தஉத்தேசிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும்எனத் தெரிவித்துள்ளது.






0 comments:
Post a Comment