சென்னை : வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். கடந்த 2012 நவம்பரில் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு
வழங்கப்பட வில்லை. கடைசியாக, கடந்த 2007ல் 17.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நிர்வாக தரப்பிலோ வராக்கடன் அதிகரிப்பு, லாபம் குறைவு போன்ற காரணங்களால் 11 சதவீதம் ஊதிய உயர்வு மட்டும்தான் வழங்க முடியும் என தெரி விக்கப்பட்டது.
இதுதொடர்பாக, வங்கி நிர்வாகங்களுடன் டெல்லி யில் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதைதொடர்ந்து, கடந்த 12ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர் கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இருந்தும், வங்கி நிர்வாகங்கள் ஊழியர்களின் கோரிக்கை களை இதுநாள் வரை ஏற்கவில்லை. எனவே, அறிவித்தப்படி அடுத்த மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மாநிலங்கள் வாரிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் பி.விஜயசேனன் கூறியதாவது: விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள் ளோம். ஆனால், இதுவரை எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. எனவே, அறிவித்தப்படி அடுத்த மாதம் டிசம்பர் 2ம் தேதி தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நா டகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

0 comments:
Post a Comment