ஒரு காட்டில் ஒரு பசு தனியாகமேய்ந்து கொண்டிருந்தது அந்த வழியாக வந்தகொடூர சிங்கம் பசுவின் மீதுபாய்ந்தது, பசுவோ தன் உயிரைகாக்க 30நிமிடம் போராடியது இறுதியில்பசுவை கடித்து கொன்று சாப்பிட்டது..
P.Rajalingam Puliangudi
மேலும்அந்த கொடூர சிங்கம் வேட்டையாடசென்றது அருகில் பத்து
பசுக்கள் மேய்ந்தும் அதில் ஒன்று மட்டும்தனியே மேய்ந்து கொண்டிருந்தது..அதனை குறி வைத்துசிங்கம் பாய்ந்தது இதனை பார்த்து மற்றபசுக்கள் தன் இனத்தை காக்கஒன்று சேர்ந்து தனது கொம்பால் முட்டிசிங்கத்தை கொன்றது...பார்த்தீர்களாஆசிரியர் சொந்தங்களே!! ஒருவிலங்கு கூட தன் இனம்அழியாமல் இருக்க ஒன்று சேர்கிறது...
எந்தருமைஆசிரியர் சொந்தங்களே இதை கதையாக எடுத்துக்கொள்ளவேண்டாம் எங்கள் கதறலாக, கண்ணீராகஎடுத்துக்கொள்ளுங்கள்...
ஆரம்பத்தில்இருந்தே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டனி,தமிழக தமிழாசிரியர்கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், என சுமார்40 சங்களின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் பாராட்டுவதற்குரியது...
உங்க்ளைபோன்றசங்களின் ஒருமித்த, உரத்த குரலினால் போராடியும், நீதிமன்றம் வாயிலாகவும் பல சாதனைகள் செய்துள்ளீர்கள்என்பது உண்மை உண்மை,மேலும்ஆசிரியர்களுக்கு தேவையான விடுப்புகள், ஊதியஉயர்வு, பதவி உயர்வு, உரிமைகளுக்ககபல போராட்டங்களை முன்னிறுத்தி வெற்றி கண்டுள்ளீர்கள் அதற்காகஅனைத்து ஆசிரியர் கூட்டனி மற்றுன் சங்கங்களைமனதார பாராட்டுகிறேன்..
ஆகவே தற்போது ஆசிரியர் என்றஇனத்தை அழித்து வரும் வெய்ட்டேஜ்என்ற கொடூர சிங்கத்தை வீழ்த்தஅனைத்து ஆசிரியர் சங்கங்களும் முன்வர வேண்டும்,அறிக்கை, தீர்மானம் மற்றும் அரசுக்கு பரிந்துரைக்கமுன்வர வேண்டும் என ஆசிரியர் தகுதித்தேர்வில்தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்அமைப்பு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறது.
Article by
P.Rajalingam Puliangudi
0 comments:
Post a Comment