சென்னை.
தீவிரம் அடைந்த ஹூட் ஹூட் புயல் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் வலுப்பெற்று அதி தீவிரமடைகிறது.
தீவிரமாகும் புயல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தமாத இறுதிக் குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமான் அருகே உருவான புயலுக்கு ஹூட் ஹூட் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது. ஒவ்வொரு புயலுக்கும் முன்கூட்டியே ஒவ்வொரு நாடும் பெயர் சூட்டுவது வழக்கம்.
அதுபோல ஓமன் நாட்டின் மரங்கொத்தி பறவையான ஹூட் ஹூட் என்ற பெயர் இந்த புயலுக்கு சூட்டப்பட்டு உள்ளது.
இந்த புயல் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு தென் கிழக்கில் 750 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அதுபோல கோபால்பூருக்கு தென்கிழக்கிலும் 750 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் தீவிரம் அடைந்துள்ளது. அது மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணிநேரத்தில் அதி தீவிரம் அடைகிறது. புயல் 12-ந்தேதி மதியம் கரையை கடப்பதாக இருந்தது. ஆனால் அது 12-ந்தேதி காலையிலேயே விசாகப்பட்டினம் அருகே கரையை கடக் கும். அப்போது அந்த பகுதியில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
இன்று மழை பெய்யும்
இந்த புயலுக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும்.
இவ்வாறு சென்னை வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8-30மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
ஓமலூர் 7 செ.மீ., பாரூர், திருப்பத்தூர், சேலம் தலா 5 செ.மீ., அரியலூர், காரைக்குடி, குடியாத்தம் தலா 4 செ.மீ., பாப்பிரெட்டிப்பட்டி, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, பெருங்கலூர், அவினாசி, திருக்காட்டுப்பள்ளி, ஓசூர், முசிறி, கொடவாசல் தலா 3 செ.மீ., நீடாமங்கலம், குன்னூர், தேவலா, பாலக்கோடு, முலனூர், வல்லம், வாணியம்பாடி, கூடலூர் பஜார், மங்களாபுரம், பெண்ணாகரம், மணமேல்குடி, சிவகங்கை,, விராலிமலை, சங்கராபுரம், மணப்பாறை, தேன்கனிக்கோட்டை, ஒரத்தநாடு தலா 2 செ.மீ.,
கோத்தகிரி, அரிமளம், தம்மம்பட்டி, கழுகுமலை, கள்ளக்குறிச்சி, உத்திரமேரூர், சிவகிரி, துறையூர், கலவை, முடுக்கூர், பேரையூர், புள்ளம்பாடி, போடிநாயக்கனூர், சத்தியமங்கலம், திருத்துறைப்பூண்டி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

0 comments:
Post a Comment