தமிழகத்தில்உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 80 ஆயிரம்பேருக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம் செய்யவேண்டும்� என அனைத்துஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கில்சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம், ரூ.1800 முதல் அதிகபட்சம்ரூ.9,900 வரை ஊதியம் உயரும்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின்படி ஊதியம் மாற்றம் செய்யப்பட்டால், 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், தொழில்கல்வி ஆசிரியர்கள் பயன் பெறுவர். மேலும்1999 முதல் 2005 வரை நியமனம் பெற்றவர்களுக்குரூ,1800ம், 2006 முதல் 2009 வரை நியமனம் பெற்றஆசிரியர்களுக்கு ரூ.3740ம், 1.6.2009க்குள்நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9890ம் ஊதிய உயர்வுகிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கிப்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனைத்து ஆசிரியர் சங்கபொது செயலாளர் கிப்சன் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில்அரசுப் பள்ளி மற்றும் நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சத்து16 ஆயிரத்து 129 பேர் இடைநிலை ஆசிரியர்களாகபணிபுரிந்து வருகின்றனர். இதில் 80 ஆயிரம் பேர் சாதாரணநிலை ஊதியம் (5200&20200&ஜிபி 2800) பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில்1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட 6வது ஊதியக்குழுவில் இடைநிலைஆசிரியர் ஊதியம் 5200+2800 = 8000 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மத்திய அரசு இடைநிலைஆசிரியர் ஊதியம் 9300+4200=13500 என வழங்கப்பட்டுள்ளது.
இதனால்ஏற்பட்ட பாதிப்பை நீக்கிட 2010ல் ஐஏஎஸ் அதிகாரிராஜிவ் ரஞ்சன் தலைமையில் ஒருநபர் குழுவும், 2012ல் அதிகாரி கிருஷ்ணன்தலைமையில் 3 நபர் குழுவும் அமைக்கப்பட்டது. ஆயினும், மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க மறுக்கப்பட்டது. இதைஎதிர்த்து அனைத்து ஆசிரியர் சங்கம்பல்வேறு ஆதாரங்களை சேகரித்து ஊதிய மாற்றம் செய்யவலியுறுத்தி, தமிழக நிதித்துறை செயலாளர்உள்ளிட்ட பலருக்கு மனு கொடுக்கப்பட்டது.
அந்த ஆதாரங்கள் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் ஊதியம்ரூ.9,300&34,800 தர ஊதியம் 4200 எனமாற்றம் செய்திட உத்தரவிடக் கோரிகடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் விசாரணைக்குப் பின்னர், தற்போது, 8 வாரத்திற்குள் ஊதியத்தில் உரிய மாற்றம் செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும் எனநிதித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின்படி ஊதியம் மாற்றம் செய்யப்பட்டால், 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், தொழில்கல்வி ஆசிரியர்கள் பயன் பெறுவர். மேலும்1999 முதல் 2005 வரை நியமனம் பெற்றவர்களுக்குரூ,1800ம், 2006 முதல் 2009 வரை நியமனம் பெற்றஆசிரியர்களுக்கு ரூ.3740ம், 1.6.2009க்குள்நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9890ம் ஊதிய உயர்வுகிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கிப்சன் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment