கோர்ட் அவமதிப்பு வழக்கில் குழித்துறை கல்வி மாவட்ட அலுவலருக்கு 30 ஆயிரம்ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி வாவரை செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலை பள்ளிதாளாளர் தாக்கல்
செய்த மனு: பள்ளியில் துப்புரவு பணி யாளராக சுசிலால்பணிபுரிந்தார். அவரது நியமனத்தை குழித்துறை கல்வி மாவட்டஅலுவலர் ரத்து செய்தார். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனு தாக்கல்செய்தோம். தனி நீதிபதி,' சுசிலாலுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும். பணப் பலன்களை அரசு நிதி உதவி மூலம் வழங்கவேண்டும்,' என 2007 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கலானஅரசின் மேல்முறையீட்டு மனுவை, ஐகோர்ட் 2009 ல் தள்ளுபடிசெய்தது. சுசிலாலுக்கு வேலை வழங்கவில்லை. கோர்ட் உத்தரவைநிறைவேற்றாததால் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் ராதாகிருஷ்ணன், குழித்துறை கல்வி மாவட்ட அலுவலர்(பொறுப்பு) ராஜேந்திரன் ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பின் கீழ்,நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல்ஐசக்மோகன்லால் ஆஜரானார்.
நீதிபதி: கோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதில், அரசுத் தரப்புஇழுத்தடிப்பது நன்றாக தெரிகிறது. அரசு வக்கீல்,' இது தொடர்பாகசீராய்வு மனு நிலுவையில் உள்ளது. இருந்தபோதிலும், ஏற்கனவேஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றத் தயார்,' என்றார். காலம்தாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், சீராய்வு மனு தாக்கல்செய்துள்ளனர். அதிகாரிகள் திருந்த வாய்ப்பு அளிக்கிறேன். கல்விஅதிகாரிகள் ராதா கிருஷ்ணன், ராஜேந்திரனுக்கு தலா 15 ஆயிரம்வீதம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். தொகையைமனுதாரருக்கு வழங்க வேண்டும். கோர்ட் உத்தரவைநிறைவேற்றியது பற்றி, 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment