Sunday, 13 July 2014

மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது

1.1.2004 பிறகுஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத்திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம்என்பன உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அளிக்கும்
மத்தியஅரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது
ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும்ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில்இக் கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவின்உறுப்பினர்கள் விவேக் ரே, ரதின்ராய், மீனா அகர்வால் உள்ளிட்டோர்கலந்து கொள்ளவுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கானசம்பளம், படிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றைநிர்ணயிப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க நீதிபதி அசோக் குமார்தலைமையிலான ஊதியக் குழுவை முந்தையஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது. இக்குழுவின் பரிந்துரை 2016-17 நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் குழுவின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகும், இக்குழு எப்போது செயல்படத்தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இந்நிலையில், இக் குழுவின் கூட்டத்தைவரும் 23ஆம் தேதி கூட்டஅசோக் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். முதலாவது கூட்டம் என்பதால் அதுசம்பிரதாய அளவில் இருக்கும் என்றும்குழுவின் செயல் திட்டம், பணிகள்தொடர்பாக அதில் முடிவு எடுக்கப்படும்எனத் தெரிகிறது.
மத்தியஅரசு ஊழியர்கள், அகில இந்திய அரசுப்பணி, யூனியன் பிரதேசங்களில் பணியாற்றுவோர், இந்திய கணக்குத் தணிக்கைத் துறை, பாரத ரிசர்வ்வங்கி நீங்கலாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டசட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தொடர்பான ஊதியம், படிகள் போன்றவைகுறித்து ஏழாவது ஊதியக் குழுஆய்வு செய்யவுள்ளது.
தற்போதுஅமலில் உள்ள சம்பள படிகள், சலுகைகள், பாதுகாப்புத் துறையில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியகாலப் பலன்கள், அரசுப் பணியில் திறமையைஊக்குவித்தும் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில், புதிய ஊதிய விகிதத்தைமாற்றியமைப்பது, சமூக-பொருளாதார-தொழில்நுட்பமாற்றங்களுக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களின் ஊதியவிகிதத்தை நிர்ணயிப்பது, அவர்களின் ஊதியத்துக்கு ஏற்ப சலுகைத் திட்டங்களைஅறிவிப்பது, 1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்குபுதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவுஓய்வூதியத்தை வழங்கலாம் என்பன உள்ளிட்டவற்றை ஆராய்ந்துஅரசுக்குப் பரிந்துரை அளிக்கும் பணி ஏழாவது ஊதியக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனது ஆய்வின் தேவைக்காக பல்வேறுதுறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்கள், தொழிற்துறை, அரசுத் துறை பணியில் இருந்துஓய்வு பெற்ற வல்லுநர்கள், தொழிற்சங்கங்களின்பிரதிநிதிகள் உள்ளிட்டோரை நியமித்துக் கொள்ள இக்குழுவுக்கு அதிகாரம்அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாகஏழாவது ஊதியக் குழுவின் முதலாவதுகூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இக்குழு18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை அளிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தனது பணியை 23-ஆம் தேதி தொடங்கும்ஊதியக் குழு பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள்உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரில்விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக மத்தியநிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுமக்களின்கருத்துகளை அறியும் வகையில், கடந்தஏப்ரல், மே மாதங்களில் ஊடகங்களில்விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்த்ன. கருத்துகளை வரவேற்க மே 31ஆம்தேதி கடைசி நாள் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஜூலை 31ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊதியக்குழுவிடம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி: செயலர், ஏழாவது ஊதியக் குழு, அஞ்சல் குறீயிட்டு எண் 4599, ஹோஸ் காஸ் அஞ்சலகம், புது தில்லி-110 016.

0 comments:

Post a Comment