Thursday, 31 July 2014

கால்நடை மருத்துவ கலந்தாய்வில் ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு கடந்த ஆண்டை விட கட் ஆப் மதிப்பெண் 2 அதிகரித்தது - DINATHANTHI


சென்னை, ஆக.1-கால்நடை மருத்துவ பொது கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.பொது கலந்தாய்வு தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகம் சார்பில்
சென்னை வேப்பேரியிலும், நாமக்கல்லிலும் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள பி.வி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் கால்நடை மருத்துவ படிப்பில் சேர மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்கல்வி படித்த மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. நேற்று பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் ஏராளமான மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.முதல் மாணவர் முதல் மாணவராக நாமக்கல்லைச் சேர்ந்த வி.சரண்குமார் நாமக்கல் கால்நடைமருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 198.25 இதே கட் ஆப் மதிப்பெண்ணில் இவரைத் தொடர்ந்து 4 பேர் எடுத்துள்ளனர். 2-வது மாணவர் எம்.கமலக்கண்ணன் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். 3-வது மாணவர் எஸ்.மனோஜ் பிரபு நாமக்கல்லைச் சேர்ந்தவர். 4-வது இடம் பிடித்த மாணவி வி.அருள் மொழி தர்மபுரியைச் சேர்ந்தவர். 5-வது இடம் பெற்ற மாணவர் எம்.எஸ்.அஸ்வந்த் கோவையைச் சேர்ந்தவர். இந்த 4 பேர்களும் சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்தனர்.கட் ஆப் அதிகரிப்புஇவர்களுக்கு அடுத்தபடியாக 198 கட் ஆப் மார்க் பெற்ற 23 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியையும், 14 பேர் வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்தனர்.நேற்று 219 இடங்களுக்கு 982 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் சில மாணவ-மாணவிகள் வரவில்லை. கடந்த ஆண்டு கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கட் ஆப் மார்க் இருந்ததை விட இந்த ஆண்டு கட் ஆப் மார்க் 2 உயர்ந்து உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும் இந்த வருடம் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவ-மாணவிகளிடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இன்று கலந்தாய்வுஇன்று (வெள்ளிக்கிழமை) உணவு தொழில்நுட்பம் படிப்பில் சேர 40 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

0 comments:

Post a Comment