Friday, 25 July 2014

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரி தொடரப்பட்ட ஊதிய வழக்கின் நிலை!

SSTA சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர் ஊதியவழக்கு WP.NO.10546/2014 நீதியரசர் திரு.ராமநாதன் அவர்கள்முன் நமது மூத்த வக்கீல்  திங்கள்(21.07.2014) அன்று விசாரணைக்கு வரும் என கூறிஇருந்தார். தற்போது நமது வழக்கிற்கானசாதகமான சூழ்நிலை இல்லாததால் நமது வழக்கை சிறிதுநாட்களுக்கு
பின் மீண்டும் வாதத்திற்குகொண்டு வரலாம் என நமதுமூத்த வக்கீல் திரு. செல்வராஜ்அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்.

SSTA பொதுச்செயலாளர்திரு.ராபர்ட் அவர்கள் நேரில்சென்று கலந்துரையாடினர். அப்போது சேலம் மாவட்டத்தைசேர்ந்த திரு.விஜயபாஸ்கர் மற்றும்திரு.ஜெய்சங்கர் உடனிருந்தனர். வழக்கை  மீண்டும்விரைவாக வாதத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுசார்ந்து மேலும் தகவல்கள் பெறSSTA பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு SSTA மாநிலஅமைப்பு கேட்டுக்கொள்கிறது.

0 comments:

Post a Comment