தஞ்சாவூர், ஜூலை.31-94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு முழு விவரம் வருமாறு:-பள்ளி நிறுவனர்பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு 304 (2)
பிரிவு சட்டத்தின் கீழ் (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்) 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.47 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 338-வது பிரிவின் கீழ் (உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் படுகாயம் விளைவித்தல்) 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 337-வது பிரிவின் கீழ் (உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் காயம் விளைவித்தல்) 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 285-வது பிரிவின் கீழ் (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தீ உருவாக்கும் பொருளை பயன்படுத்துதல்) 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 467 உடன் இணைந்த 197-வது பிரிவின் கீழ் (போலியாக சான்றிதழ் கொடுத்து ஏமாற்றியது) ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 465 உடன் இணைந்த 197-வது பிரிவின் கீழ் (போலியாக ஆவணம் புனைதல்) குற்றத்திற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.தலைமை ஆசிரியைதாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகிய 4 பேருக்கும் 304 (2)-வது பிரிவின் கீழ் (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 338-வது பிரிவின் கீழ் (உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் படுகாயம் ஏற்படுத்துதல்) 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 337-வது பிரிவின் கீழ் (உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் காயம் எற்படுத்துதல்) 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 285-வது பிரிவின் கீழ் (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தீ உருவாக்கும் பொருளை பயன்படுத்துதல்) 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிமாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோருக்கு 467 உடன் இணைந்த 197-வது பிரிவின் கீழ் (போலியாக சான்றிதழ் கொடுத்து ஏமாற்றியது) 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. என்ஜினீயர் ஜெயச்சந்திரனுக்கு 465 உடன் இணைந்த 197-வது பிரிவின் கீழ் (போலியாக ஆவணம் புனைதல்) 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.அபராதம்மேலும் புலவர் பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவு 46-ன் கீழ் தலா ரூ.100 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் சட்டப்பிரிவு 47 (1)-ன் கீழ் தலா ரூ.500 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. புலவர் பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி ஆகியோருக்கு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டப்பிரிவு 320-ன் கீழ் தலா ரூ.100 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.மேலும் காயம் அடைந்த 18 குழந்தைகளின் பாதிப்பையும், அவர்களுடைய நலத்தையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை பொருள் உதவி அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment