Saturday, 26 July 2014

இன்ஜினியர் பணிக்கு இன்று போட்டி தேர்வு.

பொதுப்பணித் துறை உள்ளிட்ட, சில துறைகளில், 98 இன்ஜினியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, இன்று நடக்கிறது. இத்தேர்வை, 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.

காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, விருப்ப பாடதேர்வும், பிற்பகல், 2:30 மணி முதல், 4:30 வரை, பொது அறிவு தேர்வும் நடக்கிறது.முதல் தேர்வு, 300 மதிப்பெண்ணுக்கும், இரண்டாவது தேர்வு, 200 மதிப்பெண்ணுக்கும் நடத்தப்படுகிறது.

எழுத்து தேர்வுக்குப் பின், 70 மதிப்பெண்ணுக்கு, நேர்முகத் தேர்வு நடக்கும்.மொத்தத்தில், 570 மதிப்பெண்ணுக்கு, தேர்வர் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., (அரசுப்பணியாளர் தேர்வாணையம்), தலைவர், பாலசுப்ரமணியன், விரிவாக செய்துள்ளார்.

0 comments:

Post a Comment