காரைக்குடி, :காலாண்டு, அரையாண்டு மற்றும் பள்ளி தேர்வுகளில் மாணவர்கள் மதிப்பெண் குறைந்தால் அதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் உரிய விளக்கம் தர வேண்டும் என மெட்ரிக்பள்ளி இணை இயக்குநர் கார்மேகம் தெரிவித்தார்.
பிளஸ் 2 காலாண்டு தேர்வில் 80 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் வரவேற்றார். மெட்ரிக் பள்ளி இணைஇயக்குநர் கார்மேகம் பேசுகையில், பொதுத்தேர்வுகள் முடிந்தபின்பே ஆய்வுகூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. அதுவும் தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
தற்போது காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு பின் இது போன்ற ஆய்வுக்கூட்டங்கள் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பாட ஆசிரியர் பெயர், செல் போன் எண், மாணவர்கள் எடுத்த மதிப்பெண், குறைந்தபட்ச மற்றும் அதிபட்ச மார்க், தேர்ச்சி சதவீதம், சென்டம் லிஸ்ட் ஆகியவை எடுக்கப்படுகிறது. பொதுத்தேர்வுக்கு பின் மாணவர்களின் தேர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி அவர்களுக்கு பயன் இல்லை. எனவே படிக்கும் போதே அவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக காலாண்டு தேர்வு முடிவுக்கு பின் ஆய்வு நடத்தப்படுகிறது.
தற்போது 80 சதவீதத்துக்கு குறைவாக மார்க் பெற்ற ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிறது. இனி மாணவர்கள் 100 மார்களுக்கு குறைவாக எடுத்தால் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் உரிய விளக்கம் தர வேண்டிய நிலை ஏற்படும். எழுதுதல், பேசுதல், கவனித்தல், வாசித்தல் என நான்கையும் வளர்த்தால் மாணவர்கள் தானகவே படிக்க கூடிய நிலை ஏற்படும். மாணவர்களை மதிப்பெண்ணுக்காக தயார் படுத்தக் கூடாது. அவர்களை மற்ற மொழி பாடங்களில் பேசக்கூடிய வகையில் மேம்படுத்த வேண்டும். அதிகம் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை கண்டு பிடித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். சொற்களை வடிவமைக்க கற்றுத்தர வேண்டும்.
மாணவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மாணவர்களிடம் உள்ள குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை, அதோடு அக்குறையை சரி செய்யக்கூடிய முயற்சிக ளையும் மேற்கொள்ள வேண்டும். கற்றுக்கொடுப்பதில் என்ன குறைபாடு உள்ளது என மாணவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள், அப்போது தான் உங்கள் குறை உங்களுக்கு தெரியும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் முருகேசன், நல்லமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment