Thursday, 6 November 2014

சிறுபான்மை மொழி ஆசிரியர்களுக்கு நாளை கலந்தாய்வு

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு தேர்வாகியுள்ள சிறுபான்மை மொழிப்பாட ஆசிரியர்கள் 144 பேருக்கு பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை (நவ.8) நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் 144 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு இணையதளம் மூலம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
எனவே, சிறுபான்மை மொழி வழி இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் சனிக்கிழமை (நவ.8) காலை 9 மணிக்கு அசல் கல்விச் சான்றிதழ்கள், 2 நகல்களுடன் பணி நியமனக் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment