2015-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கத்துக்காக தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது ஜனவரி மாதம் ஆய்வு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
சிறப்பு முகாம்
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியோடு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் 2-ந் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
விண்ணப்பங்களின்எண்ணிக்கை
தூத்துக்குடியில் மட்டும் 1-ந் தேதி சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், இடமாற்றம், நீக்கம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள், இந்த முகாமில் பெறப்பட்டன.
அந்த வகையில் சிறப்பு முகாம் மூலம் 8 லட்சத்து 89 ஆயிரத்து 427 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக 7 லட்சத்து 4 ஆயிரத்து 839 விண்ணப்பங்களும், பெயர் நீக்கத்துக்காக 18 ஆயிரத்து 560 விண்ணப்பங்களும், திருத்தத்துக்காக ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 909 விண்ணப்பங்களும், தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்காக 47 ஆயிரத்து 119 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
ஜனவரி 5-க்கு மேல் ஆய்வு
2-ந் தேதி ஆன் லைன் மூலம் 93 ஆயிரத்து 667 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிழைகள் இல்லாமல் பெயர் பதிவு செய்வதற்கு ஆன் லைன் வசதியை பயன்படுத்தலாம். இதற்காக கம்ப்யூட்டர் மையங்களில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
2015-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மற்றும் ஆட்சேபனைகள் 10-ந் தேதி வரை பெறப்படும். ஆன் லைன் விண்ணப்பங்கள் உட்பட அனைத்து விண்ணப்பங்கள் மீதும் ஜனவரி 5-ந் தேதிக்குப்பிறகு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment