Friday, 7 November 2014

இந்தி மொழியை பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு: அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி தகவல்

புதுடெல்லி: உலக அளவில் இந்தி மொழியை பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய இந்தி நிறுவனத்தில் சர்வதேச கருத்தரங்கு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர் இவ்வாறு கூறினார். இந்தி மொழியை பிரபலப்படுத்த வெளிநாடுகளில் பயிற்சி மையங்கள் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். ஆன்லைன் மூலம் இந்தி கற்கும் முறை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்தி கற்பதற்கான ஆர்வம் வெளிநாடுகளில் அதிகரித்து வருவதால் மத்திய இந்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தி மொழிக்கும், இந்தி பேசும் மாநிலங்களுக்கும் மத்திய அரசு முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஸ்ம்ரிதி இராணியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment