பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், 4 கேபிடன் அமைச்சர்கள் உள்பட 21 புதிய அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனர்.
மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிற்பகல் 1.40 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இதில் புதிதாக பதவியேற்ற 21 அமைச்சர்களின் விவரம்:
கேபினட் அமைச்சர்கள்:
மனோகர் பாரிக்கர்
சுரேஷ் பிரபு
ஜே.பி.நட்டா
சவுத்ரி பிரேந்திர சிங்
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) :
பண்டாரு தத்தாத்ரேயா
ராஜீவ் பிரதாப் ரூடி
மகேஷ் சர்மா
இணையமைச்சர்கள்:
முக்தர் அப்பாஸ் நக்வி
ராம் கிர்பால் யாதவ்
ஹரிபாய் பார்திபாய் சவுத்ரி
சன்வர் லால் கட்
மோகன் குண்டாரியா
கிரிராஜ் சிங்
ஹன்ஸ்ராஜ் அகிர்
ராம் சங்கர் கதேரியா
ஒய்.எஸ்.சவுத்ரி
ஜெயந்த் சின்ஹா
ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர்
பபுல் சுப்ரியோ
சத்வி நிரஞ்சன் ஜோதி
விஜய் சம்ப்லா
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொண்டுள்ள முதல் அமைச்சரவை விரிவாக்கம் இதுவாகும்.
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாக தெலுங்கு தேசம், சிவசேனா ஆகியவை சார்பில் முறையே ஒய்.எஸ்.சவுத்ரி, சுரேஷ் பிரபு ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மனோகர் பாரிக்கர் (59) மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதையொட்டி, நேற்று அவர் தனது கோவா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பாதுகாப்புத் துறை வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாதுகாப்புத் துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
ஐ.ஐ.டி.யில் படித்தவரான பாரிக்கர், கோவாவில் இருந்து மத்தியில் கேபினட் பதவியேற்கும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பாஜகவின் முஸ்லிம் தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி (57) 15 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையிலான அரசில் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச் சராக பதவி வகித்தார். உ.பி.மாநிலங்களவை எம்.பி.யான இவர், தற்போது பாஜக துணைத் தலைவராக உள்ளார்.
இன்றைய விரிவாக்கத்துக்கு முன்பு மத்திய அமைச்சரவையில் 45 அமைச்சர்கள் இருந்தனர். இவர்களில் பிரதமர் உட்பட 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 22 பேர் இணை அமைச்சர்களாகவும் உள்ளதும், இணை அமைச்சர்களில் 10 பேர் தனிப் பொறுப்பு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment