திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட இரு அரசுப் பள்ளிகளை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு
நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.தூத்துக்குடி குருவிக்குளம் கஸ்தூரிரங்கபுரம் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: தூத்துக்குடி மாவட்டம் உருவான பின், சங்கரன்கோவில் தாலுகாவில் இருந்த இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 கிராமங்களை, கோவில்பட்டி தாலுகாவில் சேர்த்தனர். தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ், அந்த 12 கிராமங்கள் இருந்தாலும் பதிவுத்துறை, கல்வித்துறை தலைமை அலுவலகங்கள் திருநெல்வேலியில் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக திருவேங்கடம் தாலுகாவை உருவாக்கி, இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 கிராமங்களை சேர்க்க உள்ளனர். இது பற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மே 19 ல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கும் என அரசு அறிவித்தது. 12 கிராமங்களில் உள்ள 25 பள்ளிகளில், பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலை பள்ளி, இளையரசேனந்தல் அரசு மேல்நிலை பள்ளியை மட்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றினர். இதற்கு சரியான காரணம் தெரிவிக்கவில்லை. பிள்ளையார்நத்தம், இளையரசேனந்தல் பள்ளிகளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றிய பள்ளிக் கல்வி இயக்குனரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இரு பள்ளிகளும் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கட்டுப்பாட்டின் கீழ் தொடர உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் யூஜின் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குனர், திருநெல்வேலி, தூத்துக்குடி கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments:
Post a Comment