தமிழகத்தில்வரைவு வாக்காளர் பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. பட்டியலில்பெயர் இல்லாதவர்கள், முகவரியை மாற்ற விரும்புகிறவர்கள், வயது, பெயர், முகவரியில் உள்ள பிழைகளை திருத்தம்செய்து கொள்ள விரும்புவர்கள் அதற்குரியபடிவங்களை பூர்த்தி
செய்து விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் நவம்பர் 10–ந் தேதி வரைவிண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி பிரவீன் குமார்தெரிவித்தார்.புதிதாகபெயர் சேர்ப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதுகுறித்து பிரவீண் குமார் கூறியதாவது:–
வாக்காளர்பட்டியலில் பெயர் புதிதாக சேர்ப்பதற்கானவிண்ணப்பத்துடன் இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றிற்கானசான்றுகள் இணைக்கப்பட வேண்டும். ரேஷன் அட்டை, வங்கிஅல்லது அஞ்சலக சேமிப்பு கணக்குபுத்தகம், டிரைவிங் லைசன்சு, பாஸ்போர்ட், தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்புஆகியவற்றின் சமீபத்திய ரசீது, ஆதார் அட்டைபோன்றவற்றை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம்.
வயது சான்றாக பிறப்பு சான்றிதழின்நகல் அல்லது பள்ளி சான்றின்நகல் வழங்கலாம். 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயதுசான்றிதழை கட்டாயம் அளிக்க வேண்டும். ஜனவரி1–ம் தேதி 2015–ம் ஆண்டு 18 வயதுநிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர்சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
முதல் முறையாக விண்ணப்பிக்க கூடியவர்கள்தவிர மற்ற மனுதாரர்கள் அனைவரும்அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர்புகைப்பட அடையாள அட்டை எண்ணையும்படிவத்தில் குறிப்பிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்கபடிவம் 6–யும், வாக்காளர் புகைப்படஅடையாள அட்டை தொலைந்திருந்தால் படிவம்001–யும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
வெளிநாட்டில்வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள்வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட 6ஏ படிவத்தை நேரிலோஅல்லது தபாலிலோ அளிக்கலாம். தமிழ்நாட்டில்கிராம சபை மற்றும் குடியிருப்போர்நல சங்க கூட்டங்கள் வரும்17, 30 தேதிகளில் நடைபெறுகிறது.
அக்டோபர்26, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் தமிழகம்முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்ப படிவங்களைமொத்தமாக கொடுக்கக்கூடாது. ஒவ்வொரு அரசியல் கட்சிசார்பிலும் ஒரு முகவரை நியமிக்கலாம். அவர் தினமும் 10 படிவங்களை மட்டுமே அளிக்கலாம். போலியாகவாக்காளர்கள் சேர்க்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுபிரவீண் குமார் கூறினார்.
0 comments:
Post a Comment