Friday, 10 October 2014

விரைவில் வீடு தேடி வருகிறது 'இன்டர்நெட்' : கேபிள் ஆபரேட்டர்களுடன் ஆலோசனை

வீடுகள்தோறும் வழங்கியுள்ள, கேபிள் 'டிவி' இணைப்போடு, இன்டர்நெட் இணைப்பையும் சேர்த்து வழங்கும் திட்டத்தை விரைவில், அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, கேபிள் ஆபரேட்டர்களுக்கான,
சிறப்புவிழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
தமிழ்நாடுகேபிள் 'டிவி' நிறுவனம், மத்தியஅரசின், 'ரயில்டெல்' நிறுவனம் இணைந்து, தமிழகத்தில் பிராட்பேண்ட் மற்றும் இணையதளசேவையை குறைந்தகட்டணத்தில், தமிழக அரசு கேபிள்வாயிலாக செயல்படுத்துவது குறித்து, கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களுக்கானசெயல்விளக்கக் கூட்டம் நேற்று, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிகலையரங்கில் நடத்தியது.
கூட்டத்தில், கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது:
இத்திட்டத்தின்கீழ் கேபிள் வாயிலாக, 'டிவி', இணையதள சேவை இரண்டையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக, 'செட்-ஆப் பாக்ஸ்' பயன்படுத்திக்கொள்ளலாம். இத்திட்டத்தில், எந்த சூழலிலும், தங்குதடையின்றி, கேபிள் 'டிவி', இன்டர்நெட்சேவைகளை எளிதாக பெறலாம். இதில், 'ரயில்டெல்' நிறுவனம் இணைந்துள்ளதால், தரமான சேவை மக்களுக்குபோய் சேரும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இணைப்பு வாயிலாக, அதிகபட்சம், 100 எம்.பி.பி.எஸ்., வேகம் வரை வழங்க இயலும். வீட்டு உபயோகத்துக்கும் நடுத்தர மற்றும் சிறுநிறுவனங்கள் பயன்படுத்துவதற்கேற்ப உகந்த கட்டணத்தில் 1:4 என்றவிகிதத்தில் இணைப்பு வழங்கப்படும். 24 மணிநேரம் கண்காணிக்கப்பட்டு, பராமரிப்புச்சேவை மேற்கொள்ளப்படும். இச்சேவை தமிழகம் முழுக்கஉள்ள கிராமங்களை சென்றடையும். அதனால், கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்கவேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

'ரயில்டெல்' நிறுவன தென்மண்டல பொதுமேலாளர் ராஜசேகரன், வர்த்தக மேலாளர் கிருபானந்தன், 'நெட்ஒர்க்' மேலாளர் செந்தில்குமார், ஆர்.டி.., குணசேகரன், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன துணை மேலாளர் தனபால்ஆகியோர் பங்கேற்றனர். நீலகிரி, கோவை மாவட்ட கேபிள்ஆபரேட்டர்கள் பங்கேற்று, சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

0 comments:

Post a Comment