Wednesday, 22 October 2014

நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி


 கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத்தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும்"நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை
மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (சி.பி.எஸ்..) அறிவித்துள்ளது.
இதுவரையுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்திவந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக2014 டிசம்பரில் சி.பி.எஸ்.. நடத்துகிறது. இனிஆண்டுக்கு இரு முறை இந்தத்தேர்வை சி.பி.எஸ்..தான் நடத்தவுள்ளது. http://cbsenet.nic.in/cbsenet/Welcome.aspx என்றஇணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில்இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத்தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமர்ப்பிக்கநவம்பர் 15 கடைசித் தேதியாகும். அறிவிக்கப்பட்டவங்கிக் கிளைகளில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 18 கடைசித்தேதியாகும். "ஆன்-லைன்' விண்ணப்பத்தைநவம்பர் 19-ஆம் தேதிக்குள் பிரதிஎடுத்துக் கொள்ள வேண்டும். பிரதிஎடுத்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 25 கடைசித் தேதியாகும்.

0 comments:

Post a Comment